பக்கம்:மேனகா 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

119

அத்தனை துன்பங்களிலும் அவ்வளவு ஆழ்ந்த அபிமானமுள்ள ஒரு மனிதன் தமக்கு உதவி செய்ய மிகுதி யிருப்பதை நினைத்து பெருமகிழ்வடைந்து பேசமாட்டாமல் இருவரும் மெளன மாயிருந்தனர்.

அப்போது பெரிய கலெக்டர்துரையின் சேவகனொருவன் டிப்டி கலெக்டரிடம் வந்து மரியாதையாக வணங்கி நின்று ஒரு கடிதத்தை நீட்டினான். சாம்பசிவம் திடுக்கிட்டு நிமிர்ந்து, “என்ன இது?” என்று கேட்க, அவன், “தொரெ குடுக்கச் சொன்னாங்க” என்றான். உடனே சாம்பசிவம் அதை வாங்கிப் பிரித்துப் படித்து அது குற்றப்பத்திரிகை என்று உணர்ந்தார்; முன் குறிக்கப்பட்ட மூன்று குற்றங்களும் அதில் விவரிக்கப் பட்டிருந்தன; பிறகு அதில் அடியில் வரும் வாக்கியங்களும் எழுதப்பட்டிருந்தன.

“இம் மூன்று குற்றங்களையும் நீங்கள் செய்ததாக நன்றாக ருஜுவா யிருக்கிறது. நீங்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்த பெருத்த உத்தியோகஸ்தர். நாதனில்லாமல் உங்களுடைய கச்சேரியையும், அதிகார எல்லையையும் விடுத்துப் போவதும், பொய்க் கணக்குத் தயாரிப்பதும், துரைத்தனத்தார் பணத்தை அபகரிப்பதும் உத்தியோகத்தை இழந்து, சிறைச்சாலைக்குப் போகத்தக்க குற்றங்களாகின்றன. இவற்றிற்காக உங்களை ஏன் வேலையிலிருந்து விலக்கக் கூடாதென்பதற்கு முகாந்திர மெழுதி நாளை மாலைக்குள் அனுப்ப வேண்டியது. அனுப்பத் தவறுவீர்களானால் சொல்லிக்கொள்ள யாதொரு சமாதானமும் இல்லையென்றும், குற்றங்களைச் செய்த்தாக நீங்கள் ஒப்புக்கொள்வதாயும் கருதப்படும். நிற்க; உங்களிடமுள்ள சர்க்கார் சீல், முகர் முதலியவற்றை கஜானா டிப்டி கலெக்டரிடம் ஒப்புவிக்க வேண்டியது.”

என்று எழுதப்பட்டிருந்த பத்திரிகையை சாம்பசிவம் படித்தார். கருத்தை கனகம்மாளிடம் கூறினார். அதற்குள் அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/120&oldid=1252000" இலிருந்து மீள்விக்கப்பட்டது