பக்கம்:மேனகா 2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

129

பிடுங்கிப் பருந்தைப்போல வட்டமிட்டனர். ஐந்து நிமிஷத்தில் ரெங்கராஜு மோட்டார் வண்டி யொன்றில் வந்து சேர்ந்தான்; பரோபகார குணம் நிறைந்த ஜனங்கள் தொட்டிலைத் தூக்கி வைக்க, “நான் நீ” என்று முன்னுக்கு வந்தனர். அடுத்த நிமிஷம் தொட்டில் மோட்டாரில் வைக்கப்பட்டது. மற்ற மூவரும் அதிலேயே தொற்றிக்கொள்ள, வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது. தொட்டில் அசையுமோ வென்று அஞ்சிய ரெங்கராஜூ, “மெதுவாகப் போகட்டும்; மெதுவாகப் போகட்டும்” என்று நிமிஷத்திற்கு நிமிஷம் வண்டிக்காரனிடம் கட்டியம் கூறிக் கொண்டே யிருந்தான். கால் நாழிகை நேரத்தில் வண்டி புரசைப் பாக்கத்திலுள்ள டாக்டர் வில்லியம்ஸ் துரை வீட்டின் வாசலில் வந்து நின்றது.

வில்லியம்ஸ் என்னும் பெயரைக் கொண்ட அந்த துரை சுத்தமான ஐரோப்பியரல்லர். ஐரோப்பியத் தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர்களான யூரேஷிய ரென்னும் வகுப்பைச் சார்ந்தவர். அந்த் வகுப்பினரை ஜனங்கள் சட்டைக் காரரென்று குறிப்பது வழக்கம். வில்லியம்ஸ் துரையிடத்தில் இந்திய அம்சத்தைக் காட்டிலும் ஐரோப்பிய அம்சம் அதிகமா யிருந்தமையால், அவர் இரண வைத்தியத்தில் மகா நிபுணரா யிருந்தார். பணம் வாங்குவதிலோ அதற்குமேல் நிபுணர். அவரது பிடிவாதத்தைக் குரங்கின் பிடிக்கே ஒப்பிடவேண்டும். அவர் எதைச் சொன்னாலும் அது முடிவு. யுகமே மாறினாலும், ஜெகமே பிறந்தாலும், அவருடைய தீர்மானம் மாத்திரம் மாறாது. பிறர் அதைப்பற்றி ஏதாகிலும் ஆட்சேபனை கூறினால், அவருக்கு உடனே மூக்கின் மேல் கோபம் பிறந்துவிடும். எழுந்து அடிக்கப்போய்விடுவார். குரங்கினிடம் பூமாலை அகப்பட்டுக்கொண்டதைப்போல, அவரிடம், அந்த அருமையான வித்தை அகப்பட்டுக்கொண்டு விழித்தது. ஜனங்கள் அவரிடம் வைத்தியம் செய்து கொள்ளவருவதற்கு

அஞ்சி நடுங்குவார்கள். என்றாலும், இரண வைத்தியத்தில்;

மே.கா.II-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/130&oldid=1252012" இலிருந்து மீள்விக்கப்பட்டது