பக்கம்:மேனகா 2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

மேனகா

தோன்றிய அவர், அன்று தமது இருப்பிடத்திற்கு வந்ததைப்பற்றி அவள் சந்தோஷ மடைந்தாள். ஆபரேஷனைத் தவிர, மற்ற சிகிச்சைகளை யெல்லாம் செய்ததை நினைத்து, அவர் முற்றிலும் இரக்கமில்லாத மனிதரல்ல ரென்றும், மனிதரிடத்தில் உண்டாகும் இரக்கத்தை அவர் வெளியில் காட்டாமல் காரியத்தைச் செய்பவரென்றும், பத்திரமில்லாமல் ஆபரேஷன் செய்ய அவர் உண்மையில் அஞ்சுகிறாரென்றும் நினைத்தாள். அன்றைய பகலிற்குள்ளாகிலும் சாம்பசிவம் வந்து விடுவாரென்று நிச்சயமாக நினைத்திருந்தாள். அவரோ வரவில்லை. அப்பொழுது ரெங்கராஜு, “அம்மா! இது என்னவோ சந்தேகமா யிருக்கிறது. நான் உடனே ரயிலேறி செங்கற்பட்டுக்குப் போய் எஜமானை அழைத்துக் கொண்டு வருகிறேன்” என்றான். கனகம்மாள் அதை ஆமோதித்து அவனை அடுத்த வண்டியில் செங்கற்பட்டுக்கு அனுப்பினாள். அவன் சென்ற ரயில் பகல் மூன்று மணிக்குச் செங்கற்பட்டை அடைந்தது. வழியில் எதிர்ப்பட்ட வண்டிகளில் அவர் வருகிறாரோவென்று எச்சரிக்கையாகப் பார்த்துக்கொண்டே ரெங்கராஜு சென்றான். எந்த வண்டியிலும் சாம்பசிவம் காணப்படவில்லை. செங்கற்பட்டில் இறங்கி, ரயிலடியில் ஜனங்கள் தங்குமிடங்களிலெல்லாம் போய் அவன் தேடினான். பிறகு ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு அவர்களது சிற்றுருக்கு மாலை ஆறு மணிக்குப் போய்ச் சேர்ந்தான். கனகம்மாளால் குறிக்கப்பட்ட நீலகண்டம் செட்டியாரிடம் சென்று, டிப்டி கலெக்டர் சாம்பசிவையங்கார் பணம் வாங்க வந்தாரா வென்றும் அவர் எங்கிருக்கிறார் என்றும் விசாரிக்க, செட்டியார், “நீ யார்?” என்று கேட்டார். “நான் அவருடைய சேவகன். அவரை அவசரமாக அழைத்துக்கொண்டு போகவேண்டும்” என்றான் ரெங்கராஜு. உடனே செட்டியார், “அவர் பணம் வாங்கிக்கொண்டு நேற்றைக்குச் சாயுங்காலமே புறப்பட்டு பட்டணம் போய்விட்டாரே! நீ எங்கிருந்து வருகிறாய்?" என்றார். அதைக் கேட்ட ரெங்கராஜு பெருத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/137&oldid=1252019" இலிருந்து மீள்விக்கப்பட்டது