பக்கம்:மேனகா 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

மேனகா

நிஷடகண்டகம் செட்டியார் மேலும் கீழும் பார்த்தார்; மொட்டைத் தலையைத் தடவிக்கொண்டார்; மிகவும் அமர்த்த லாகத் திண்டில் சாய்ந்தவண்ணம், “பணமாவது காசாவது! இப்போ காலம் இருக்கிற இருப்பு ஒங்களுக் கென்ன தெரியும். பணத்தைக் கண்ட மூளியாரையா? எங்கேயும் இப்ப சுணக்கமா இருக்குது; பணம் பெறுகிறது குதிரைக் கொம்பாயிருக்கிறது எளவு; ஒங்களுக்கு ஒடனே வேணும். எங்க வூட்டுல பணம் காச்சா தொங்குது. இப்போ சரிப்படாதுங்க. அடுத்த மாஷம் சிங்கப்பூரிலே யிருந்து ஊண்டியல் வருதுங்க; அதுக்குப் பொறவால வாங்க; பார்த்துக்கிடலாம்” என்றார். அதைக் கேட்ட சாம்பசிவம் தமது அவசரத்தை மென்மேலும் திரும்பத் திரும்ப விளக்கி செட்டியாரிடம் கெஞ்சி மன்றாடினார். அதிகமான வட்டி தேவையானலும் கொடுப்பதாகக் கூறினார். உடனே செட்டியார், “இதென்ன ஐயா எளவு தொல்லையா போச்சு, பணமில்லேன்னா விடமாட்டேங்கிரே! அந்த முள்ளிக்கா யத்ததென வூட்டுக்கு எவன் ஐயா ஆயிரம் ரூவா கொடுப்பான். மூணுகாசுகூட அது தாளாதையா; வேலெயப் பாரையா” என்றார். உடனே சாம்பசிவம் வீடு, நிலம் முதலிய எல்லாவற்றையும் அடமானம் வைப்பதாகவும் இரண்டு வட்டி கொடுப்பதாகவும் ஆயிரத்துக்கு இரண்டாயிரமாக எழுதிக் கொடுப்பதாகவும் ஒப்புக்கொள்ள, செட்டியார் அரை மனதோடு அதற்கு இணங்கினார். பிறகு அதற்குத் தேவையான தஸ்தாவேஜா எழுதப்பட்டது. அந்த ஊருக்கு நான்கு மயிலுக்கப்பாலுள்ள சப்ரிஜிஸ்டரார் கச்சேரியில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. மாலை 5-மணிக்கு, செட்டியார் ரூபா ஆயிரத்தையும் பணமாக எண்ணிவிட்டார்; சாம்பசிவம் அதை எடுத்து பெருத்த மூட்டையாகக் கட்டிக் கொண்டு குதிரை வண்டியில் உட்கார்ந்தார். இரவு ஒன்பது மணிக்கு வண்டி செங்கற்பட்டு வந்து சேர்ந்தது. சாம்பசிவம் கீழே இறங்கி பணமூட்டையையும் கையிலெடுத்துக்கொண்டு ரயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/139&oldid=1252021" இலிருந்து மீள்விக்கப்பட்டது