பக்கம்:மேனகா 2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

13

நேரமாயினும் துயிலுக்குச் செல்லும்படியும் வற்புறுத்தி வேண்டியதெல்லாம் வீணாயிற்று. அந்தப் பயங்கரமான இரவு மெல்லக் கழிந்தது; மறுநாட் பொழுது புலர்ந்தது. மேனகாவின் உணர்வை கிரகணம்போல் மறைத்திருந்த இரவு கழிந்தவுடன், அவளது உணர்வு தெளிவடைந்து மதியும் பிரகாசிக்கத் தொடங்கியது. அவள் கண்களை நன்றாகத் திறந்து கொண்டாள். முதல் நாள் முற்றிலும் ஆகாரமின்றி இருந்தமையால் அவளது தேகம் நிலைத்துநில்லாமல் பறந்தது. கண்கள் இருண்டன. தலை சுழன்றது. தேகம் அசைக்க வொண்ணாமல் மரத்துப் போயிருந்தது.

அத்தகைய சமயத்தில் ஒரு மோட்டார் பைசைக்கில் வந்து அந்த அறைக்கு வெளியில் நின்றது. அடுத்த நிமிஷத்தில் டாக்டர் துரைஸானி மிகவும் சுறுசுறுப்பாக உள்ளே நுழைந்தாள்.

அவளைக் கண்டவுடன் நூர்ஜஹான் விரைந்தெழுந்து துரைஸானியை வரவேற்று ஆசனத்தில் அமரச்செய்தாள். துரைஸானி உடனே நாடி பார்க்கும் குழாயை எடுத்து மேனகாவின் மார்பு முதலிய இடங்களில் வைத்து ஆராய்ச்சி செய்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்தாள். ஆனால், அவளது முகம் திருப்திகரமாகக் காணப்படவில்லை. முதல்நாட் காலையில் அவள் அவ்விடத்தை விட்டுப் போன பின்னர் நிகழ்ந்தவற்றையும், மேனகாவின் நிலைமையிலுண்டான மாறுபாடுகளையும், அவள் ஆகாரமே கொள்ளாமலும், கண்களை திறவாமலும் ஒரே நிலைமையில் கிடப்பதையும் நூர்ஜஹான் அவளிடம் உடனே விரிவாய்க் கூறித் தனது அச்சத்தை வெளியிட்டாள். அதைக் கேட்டதுரைஸானி, “நான் நேற்றைய தினம் மிகவும் அருமையான மருந்தைக் கொடுத்தேன். அதனாலேயே இவள் தனது இயற்கை நிலைமையை அடைந்திருப்பாள். நீங்கள் இருவரும் சம்பாஷணை செய்ததனாலேயே இவளுடைய நிலைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/15&oldid=1251479" இலிருந்து மீள்விக்கப்பட்டது