பக்கம்:மேனகா 2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

மேனகா

சொல்லவில்லை. துரைஸானிக்கு இந்தச் சங்கதி வேறு எந்த வகையிலோ தெரிந்து அவரிடம் கேட்க, அவர் அது உண்மைதானென்று ஒப்புக்கொண்டாராம்.துரைஸானி இதை மிகவும் ரகசியமாகக் கூறி, உங்களை மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும்படி சொன்னார்கள். இந்த விஷயம் எங்கள் இருவருக்குமே தெரிந்தது; நாங்கள் இதை வெளியிட மாட்டோம்; அதைப்பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலை கொள்ளவேண்டாம்; துரைஸானி வந்தால் என்னுடைய உத்தியோகம் போய்விடும். நீங்கள் விசனப்பட வேண்டாம்” என்று கூறி மன்றாடிய வண்ணம் வராகசாமியின் முகம் கண்கள் முதலியவற்றை அன்போடு துடைத்துவிட்டு, ஏதோ ஒரு மருந்தை எடுத்து அவனது வாயில் வைத்து, சிறிது பருகுவித்தாள். அவளது அன்பையும், வேண்டு கோளையும், அவளுக்குத் துன்பம் உண்டாகும் என்பதையும் கருதி வராகசாமி தனது ஆவேசத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டான்.

உடனே அந்த அழகிய மடந்தை ஒருவாறு புன்னகை செய்து, “உங்களைப் பார்த்தால் ஒரு எறும்புக்கும் துன்பஞ் செய்யாத சாதுவைப் போலிருக்கிறதே. நீங்கள் உங்களுடைய மனைவியைக் கொல்லப் போனீர்கள் என்பதைக் கேட்க, எனக்கு நம்பிக்கையே உண்டாகவில்லை. படிக்காத மூடர்கள் செய்யத்தகுந்த காரியத்தை நீங்கள் செய்யத் துணிந்தீர்களா! ஆச்சரியம்! ஆச்சரியம்! அவளைக் கொல்ல நினைத்தீர்களே! கொலை செய்தவனுக்கு விதிக்கப்படும் தண்டனையை அல்லவா அவளுக்கு நீங்கள் விதிக்க நினைத்தீர்கள்! விபச்சார தோஷத்திற்கு உயிரை வாங்குவது மிகவும் கடுமையான தண்டனையாயினும், புருஷனுக்கு அவமானம் உண்டான சமயத்தில், அவர்கள் மனைவியைக் கொல்ல நினைப்பது இயல்பே. அப்படிக் கொன்றாலும் அது குற்றமாகாது; ஆனால், அவள் உண்மையில் விபசாரம் செய்தாள் என்பதை நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/165&oldid=1252197" இலிருந்து மீள்விக்கப்பட்டது