பக்கம்:மேனகா 2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

மேனகா


வராக:- நீ கேட்பதெல்லாம் சரியான கேள்விகளே; என்றாலும், அவள் என் மனைவி என்பதைப்பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. அவளல்ல வென்று சொல்வதற்கில்லை. அவள் அன்னியரால் பாதுகாப்பாக வற்புறுத்தி வைக்கப் பட்டிருக்கலாம். காரியம் அப்படி நடந்திருக்குமானால் அவள் இதுகாறும் அவசியம் களங்கமடைந்திருப்பாள். அப்படித்தான் தேக சுகத்தை இழந்த பெண்ணை எவன் திரும்பவும் அழைத்துக் கொள்வான்? அவள் உயிரோடிருந்து, இன்னமும் எனக்கு அவள் அவமானம் உண்டாக்குவதைக் காட்டிலும் சாவதே நல்லது.

வெள்ளை:- (புன்சிரிப்போடு) நீங்கள் சொல்லுவது எப்படி இருக்கிறதென்றால், கிணற்றில் விழுந்து தத்தளிக்கும் மனிதரைத் தண்ணீருக்குள் அழுத்திவிடுவதைப் போலிருக் கிறது. உலகத்தில் ஸ்திரீகளுக்கு ஆபத்து அதிகம். ஆண்பிள்ளைகளோ பொல்லாதவர்கள். நல்ல அழகான பெண்களைக் கண்டுவிட்டால், யோக்கியர்கள் கூட அயோக்கியர்களாக மாறிவிடுவார்கள். பலவந்தத்தினாலோ, மோசத்தினாலோ உங்களுடைய மனைவியை அவள் மனதுக்கு விரோதமாக பிறர் அபகரித்துக்கொண்டு போயிருந்தால், அவளை மீட்க வேண்டியது, அவளுடைய நாயகனாகிய உங்களுடைய கடமையல்லவா? அவள் அன்னியரால் வஞ்சிக்கப்பட்டது அவளுடைய குற்றமாகுமா? அவளை அப்படியே விட்டுவிடுவது பாவமல்லவா? இன்னமும் அவள் மாசற்ற கற்புடையவளாயிருக்கலாம். நீங்கள் வந்து காப்பாற்று வீர்களென்று அவள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்க லாம். கற்பழிந்து போமாயின் உத்தம ஸ்திரீகள் உயிரை வைத்துக் கொண்டிருக்கவே மாட்டார்கள். உங்களுடைய மனைவி உயிரோடிருப்பதால், அவள் இன்னமும் களங்கமற்றவளா யிருக்கிறாளென்பது நிச்சயமாகத் தெரிகிறது. அவளை மீட்கவேண்டுமே என்பதை நினையாமல் நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/169&oldid=1252222" இலிருந்து மீள்விக்கப்பட்டது