பக்கம்:மேனகா 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

181

முகம்மது திகைத்து அசைவற்று உட்கார்ந்து போனான். உடனே மந்திரவாதி காகித மடிப்பை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டு, நைனாமுகம்மதுவின் கையில் கொடுத்து, “இது யாருடைய எழுத்து எனறு பாரும்” என்றார்.

அதை வாங்கிப் பார்த்தவுடனே நைனா முகம்மது பிரமித்து, “இது என் மாமனாருடைய எழுத்துத்தான்” என்றான்.

மந்திர:- இதுதான் உம்முடைய மாமனாரால் போலீசாருக்கு எழுதி யனுப்பப்பட்ட் பிராது என்னுடைய பாதாள எட்சினி தேவதையை அனுப்பி வரவழைக்கிறேன். இதோ பாரும். போலீஸ் ஆபீஸ் முத்திரை இந்தக் காகிதத்தில் பதிந்திருக்கிறது; இதிலுள்ள விஷயத்தை நீர் படித்துப் பார்க்கலாம் - என்றார்.

ஆச்சரியத்தினால் பிணிக்கப்பட்டுப் போயிருந்த நைனா முகம்மது அந்தக் காகிதத்திலிருந்த போலீஸ் ஆபீஸ் முத்திரையைப் பார்த்தான். பிறகு அதை வாங்கிப் படிக்கத் தொடங்கினான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

பிராது

சென்னை துரைத்தனத்தின் நிருவாகசபை
அங்கத்தினரான கான் பகதூர் பெரியதம்பி
மரக்காயரிடமிருந்து,

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு

ஐயா!

திருவல்லிக்கேணி தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலுள்ள வக்கீல் வராகசாமி ஐய்யங்கார் என்பவருடைய மனைவியான மேனகா என்னும் பெண்ணை, அந்த வக்கீலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/182&oldid=1252341" இலிருந்து மீள்விக்கப்பட்டது