பக்கம்:மேனகா 2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

189

மூச்சு ஒழுங்காக உட்சென்று வெளிப்படாமையால் திக்குமுக்காடியது; வயிறு உப்புச மடைந்து வெடிக்கும் நிலைமையை அடைந்தது. ஊற்றுக் கண்களிலிருந்து தண்ணிர் வருதலைப்போல, அவரது தேகத்திலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. அத்தனை துன்பங்களுக்கும் வட்டியாக, அவர் கட்டப்பட்டிருந்த இடத்தில் எறும்புப் பாழிகளிருந்தன; பாசறைக்கு அணிவகுத்துச் செல்லும் படைகளைப்போலச் சென்ற கட்டெறும்புகளின் ஒழுங்கை சாமாவையரது உடம்பு கலைத்தமையால் அவைகள் யாவும் அவர்மீது சினங்கொண்டு, அவரது உடம்பில் மொய்த்துக் கொண்டு கடிக்கவாரம்பித்தன. கயிற்றின் கட்டுகளால், அவரது தேகத்து இரத்த ஒட்டம் ஆங்காங்கு தடைபட்டுப்போயின. அதனால் அநந்தகோடி ஊசிகள் கொண்டு குத்துதல் போன்ற உணர்ச்சி, உடம்பு முற்றிலும் உண்டாயிற்று; அவர் அத்தகைய நரக வேதனையிலிருந்து, இரவு இரண்டு மணி முதல், வதைப்பட்டுத் தவித்திருந்தார். இரயில் வந்து தம்மைக் கொன்று விடுமோ வென்று ஆரம்பத்தில் நினைத்து அதைப்பற்றி பெரிதும் அச்சங்கொண்டிருந்த சாமாவையர் நாழிகை செல்லச் செல்லத் தமது தேகத்தின் நரகவேதனையைப் பொறுக்க மாட்டதவராய் தமது உயிர் உடனே போய்விடுவதே நல்லதென நினைத்தார்; இரயில் சீக்கிரம் வரவில்லையே என்று எண்ணி எண்ணி அதையே ஜெபமாகச் செய்கிறார்; இரயில் போவதன் ஒசையும், இஞ்சின் ஊதிய ஓசையும் அருகில் அடிக்கடி கேட்டன. இதோ ரயில் வந்துவிட்டது. அடுத்த நிமிஷம் தமது நரகவேதனை ஒழிந்து போகுமென்று நினைக் கிறார். அதே நிமிஷத்தில் அதற்கு மாறாக நினைக்கிறார். பூலோகத்தில் சுகங்களையெல்லாம் அநுபவியாமல் தாம் அகாலமரண மடையப்போவதை நினைத்து விசனமடைந்து விம்மி விம்மி அழுகிறார். மனதார அழவும் அவரால் கூடாமற் போனது. அவர் தம்மை விடுவித்துக் கொள்ளக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/190&oldid=1252349" இலிருந்து மீள்விக்கப்பட்டது