பக்கம்:மேனகா 2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

மேனகா

விஷயமாக நாகைப்பட்டணத்துக்குப் போகிறவன். ராத்திரி ஒரு மணி வண்டியில் இறங்கி திருவாரூரில் ஒரு சிநேகிதர் வீட்டில் தங்கினேன். அங்கே கொள்ளையர்கள் வந்து, என்னிடமிருந்த பதினாயிரம் ரூபாயையும் எடுத்துக்கொண்டு, என்னைக் கட்டிக்கொண்டு வந்து இங்கே போட்டுவிட்டார்கள். நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தது பெரிதல்ல. என்னுடைய மானத்தைக் காப்பாற்ற இரண்டு துணிகளும், நாகைப்பட்டணம் போக ஒரு டிக்கட்டும் வாங்கிக் கொடுப்பீர்களானால், நான் அதை மறக்கமாட்டேன். நாகைப்பட்டணம் போனவுடன் அவை களின் கிரயத்தை அனுப்பிவிடுகிறேன்” என்று கூறிக் கெஞ்சி மன்றாடினார். அதைக் கேட்ட கந்தன், “ஐயோ பாவம்! ஐயருடா! பெரிய மனிசரு வந்து மாட்டிக்கிட்டாருடா! நீ நம்ப விசயபுரம் மாணிக்கம்பிள்ளை கடைக்கு ஒடி கடனா ரெண்டு துணி எடுத்துக்கிட்டு வா; நான் டிக்கட்டு வாங்கிக்கிட்டு வாறேன்” என்றான். உடனே இருவரும் தலைதெறிக்க ஒடி மறைந்து போனார்கள். தனிமையில் விடப்பட்ட சாமாவையர் உடனே எண்ணமிடலானார். தாம் அப்படியே நேராக நாகைப் பட்டணம் போகிறதா, அல்லது கமலத்தின் வீட்டுக்குப் போய் அவளது செய்தியை அறிந்துகொண்டு போகிறதா வென்று அவர் யோசனை செய்தார். எப்படியாகிலும் கமலத்தை இன்னொருமுறை தாம் பார்க்காவிட்டால், தமது ஆவல் தீராதென்றும், தமது ஜென்மம் கடைத்தேறாதென்றும் அவர் இன்னமும் நினைத்தார். ஆனால், தாம் அப்போது ஏழ்மை நிலையிலிருந்தமையால், அப்படியே அவளிடம் போனால், மதிப்பு ஏற்படாதென்றும், சென்னைக்குப்போய் பணம் கொண்டுவரவேண்டு மென்றும் முடிவுகட்டிக்கொண்டார். டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நாகைப்பட்டணம் போய் கப்பல் வியாபாரியிடத்தில், தமது பணம் களவாடப்பட்டதைக் கூறி, சென்னைக்குப் போகச் செலவாகும் பணத்தை அவரிடம் கடனாக வாங்கிக்கொண்டு ஊருக்குப் போக வேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/195&oldid=1252354" இலிருந்து மீள்விக்கப்பட்டது