பக்கம்:மேனகா 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மேனகா

சாய்ந்தாள். அவ்வாறு எழுந்து உட்கார்ந்ததனாலும், கை, கால்களுக்கு உழைப்பைக் கொடுத்ததனாலும், தேகத்தில் தண்ணிர் பட்டதனாலும் ஒரு விதமான களைப்பு மேலிட்டதனால் மயக்க மடைந்து நாற்காலியிற் சாய்ந்து உறங்கினாள். மேல் நடந்த விஷயங்களை யெல்லாம் விரிவாகக் கூறுவது மிகையாகும்.

அன்று மாலை ஐந்தேகால் மணிக்கு ஒரு மோட்டார் வண்டி அவர்களிருந்த சவுக்கண்டியின் வாசலில் வந்து நின்றது. அதில் மேனகா தனது சொந்த உடையையும் ஆபரணங்களையும் அணிந்தவளாய் வாடித் துவண்டு சாய்ந்திருந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் துப்பட்டியால் தன்னை மறைத்துக் கொண்டு நூர்ஜஹான் அருகில் உட்கார்ந்திருந்தாள். வண்டி நிற்கு முன் அலிமா அங்கு வந்து ஆயத்தமாக நின்றாள். வண்டி நின்றவுடன் இரண்டு மகமதியப் பெண்களும் மேனகாவை மெல்லத் தாங்கி உட்புறம் அழைத்துப் போய் சாய்மான நாற்காலியில் விட அவள் அதில் சாய்ந்து கொண்டாள். நூர்ஜஹானது தேகம் படபடத்துத் தோன்றியது. உஸ்ஸென்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். மேனகாவின் மேனியில் குளிர்ந்தகடற் காற்றுப் பட்டதனாலும், வண்டியின் ஒட்டத்தினாலும் இரண்டு நாட்களாக மரத்துப்போயிருந்த அவளது தேகத்தில் சுறுசுறுப்பும் ஊக்கமும் உண்டாயின; இரத்தமும் நன்றாக ஒடத் தலைப்பட்டது. இரண்டு நாட்களாக ஆகாரங் கொள்ளாமையால் ஏற்பட்ட களைப்பு அப்போதே மேலிட்டுத் தோன்றியது. அந்த நிலைமையில் கடற்கரையில் ஒரு மனிதருக்கு நேர்ந்த விபத்தைக் கண்டதனால் அவள் மனது பொங்கி எழுந்து இன்னமும் தத்தளித்தது. அவ்விருவரது தோற்றமும் சந்தேகப்படத் தக்கதாய்க் காணப்பட்டமையால், அலிமாபி நூர்ஜஹானைப்பார்த்து என்ன விசேஷ மென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/20&oldid=1251484" இலிருந்து மீள்விக்கப்பட்டது