பக்கம்:மேனகா 2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

மேனகா

ஜன்னல்கள் முதலியவை நின்றிருந்தன. அரைப்பாகம் கடிபட்ட பன்ரொட்டித் துண்டொன்று அவரது கையிலிருந்தது. சப் ரிஜிஸ்டிரார் கச்சேரிக்கு வந்திருந்த கப்பல்காரர் அவர்தானோ வென்று மந்திரவாதி ஐயமுற்றார். ஆனால், அவர் தமது முகத்தில் எவ்விதமான சலனத்தையும் காட்டாமல், “பாயி! சலாம். இதுதானே பதினேழாம் நம்பர் வீடு? இதில் ஆதம்சா ராவுத்தர் இருந்தாரே; அவர் உள்ளே இருக்கிறாரா?” என்றார்.

மரைக்காயர்:- (திகைப்பும் கோபமுமடைந்து) இதுதான் பதினேழாம் நம்பர் வீடு? இதில் பத்து வருஷமாக இருக்கிறேன். இங்கே ஆதம்சா என்று எவரும் இல்லையே!

மந்திர:- அப்படியா! பதினேழாம் நம்பர் வீட்டில் இருப்பதாகச் சொன்னாரே? தங்களுடைய பெயரென்ன பாயி?

மறைக்காயர்:- இது என்னுடைய வீடு; என் பாட்டனார் காலத்திலிருந்து எங்களுக்குச் சொந்தமானது. கலெக்டர் கச்சேரியில், பச்சா மொகிதீன் என்று என்பேரில் தாக்கலா யிருக்கிறது; சர்ட்டிபிகேட்டு காட்டட்டுமா?- என்று குறும்பாக மொழிந்தார்.

அதைக் கேட்ட மந்திரவாதி மிகவும் நயந்து, “பாயி! கோபித்துக்கொள்ள வேண்டாம்; என்னுடைய சிநேகிதர் நம்பரை தப்பாகச் சொல்லி விட்டார் போலிருக்கிறது. நீங்கள் போய் நாஷ்டா பண்ணுங்கள்; நானும் போகிறேன்; சலாம்” என்று சொல்லிவிட்டு அப்பால் நடந்தார். மரைக்காயரும் உட்புறம் போய்விட்டார்.

மந்திரவாதி நேராகச் சென்று தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவை அடைந்து சாமாவையரது வீட்டிற்கு வந்து முன் போலவே, “அம்மா! அம்மா! ஐயர் வந்துவிட்டாரா?” என்றார்.

சற்று முன் மந்திரவாதி வந்ததை மீனாக்ஷியம்மாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/207&oldid=1252380" இலிருந்து மீள்விக்கப்பட்டது