பக்கம்:மேனகா 2.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

மேனகா


சாமா:- ஒரு பெண் இருக்க வேண்டுமே?

மந்திர:- பெண் ஏன் வருவாள்? நீர்தான் ஐயாயிரம் ரூபாயை வாங்கி கொண்டு, உனக்குச் சோறு போடும் எஜமானையே ஏமாற்றி விட்டீரே! அவரோடு வரக்கூடிய பெண்ணையா நீர் அனுப்பினர்? - என்றார்.

அதைக் கேட்ட ஐயர் அச்சமும் திகைப்பும் அடைந்து, “என்ன நடந்தது? பெண் எங்கே போனாள்? அவர் வீட்டில் தானே இருக்கிறாள்?” என்றார்.

மந்திரவாதி, “சங்கதி ஒன்றும் உமக்குத் தெரியாதோ? இதோ இந்தக் கடிதத்தைப் படித்துப் பாரும். நீர் அனுப்பிய பெண்ணின் யோக்கியதையும், நீர் செய்த காரியம் எப்படி முடிந்த தென்பதும் தெரியும்” என்று கூறியவண்ணம் ஒரு கடிதத்தைக் கொடுக்க, சாமாவையர் மிகுந்த ஆவலோடு அதை வாங்கினார்; கடிதத்தைப் பிடித்த அவரது கை நடுங்கியது. மனம் கலங்கியது. அந்த ஒரு நொடியும் யுகமாய்த் தோன்றியது. அவர் அதைப் பிரித்துப் படித்தார். உடனே அவரது முகம் மாறுதலடைந்தது; அவர் ஏதோ சொல்ல நினைத்தார்; வாய் குழறியது. “ஆனால், பெண் தப்பித்துக்கொண்டு போய் விட்டாளா? எஜமானருடைய மாமனார் வீட்டிலா இருக்கிறாள்?” என்றார்.

மந்திர:- ஆம்.

சாமா:-அப்படியானால் விஷயம் வெளியாயிருக்குமே?

மந்திர:- இதுவரையில் வெளியாகவில்லை; இன்னம் இரண்டொரு நாளில் வெளியாய்விடும்.

சாமா:- வெளியானால்?

மந்திர:- நீங்கள் மூவரும் காராக்கிரகத்துக்குள் போக வேண்டியதுதான். அடுத்த சங்கதி நீர் சாதாரண காரியமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/209&oldid=1252383" இலிருந்து மீள்விக்கப்பட்டது