பக்கம்:மேனகா 2.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

மேனகா

பட்டு, இராயப்பேட்டை வைத்தியசாலையில் கிடக்கிறான். எங்களுக்கு இத்தனை ஆபத்துகள் ஒரே காலத்தில் வந்து விட்டன. இந்த ஆபரேஷனுக்கு நாங்கள் பணம் கடனாக வாங்கியே ஆகவேண்டும். எங்களுக்கு ஒரு வீடும் நிலமும் இருக்கின்றன. என் பிள்ளை அவைகளை அடமானம் வைத்துப் பணம் வாங்கிவரப் போயிருக்கிறான். பணந்தான் கிடைக்க வில்லையோ, அல்லது வாங்கிக்கொண்டு வந்த பணத்தை திருடர் வழிப்பறி செய்து கொண்டு போய்விட்டார்களோ என்னவோ தெரியவில்லை; போன சேவகனும் திரும்ப வில்லை. இன்றைக்குள் சேவகனாவது எப்படியும் வந்து விடுவான்; நீங்கள் தயவு செய்யுங்கள்.

டாக்டர்:- (சிறிது கோபங்கொண்டு) பணத்துக்காக மாத்திரம் நான் தாமதிக்கவில்லை யென்று எத்தனை தடவை சொல்லுகிறது. கார்டியன் பத்திரம் எழுதிக் கொடுக்கு முன், நான் ஆபரேஷன் செய்வது கூடவே கூடாது. ஆயிரத்தோரு தரம் சொல்லுகிறேன்.

கனக:- தானாக இவள் சாவதைவிட, இவளைப் பிழைக்கும் பொருட்டு நாம் செய்த முயற்சியால் இவள்சாவதனால் கெடுதல் இல்லை. இந்த விஷயத்தில் என் பிள்ளை உங்கள்மேல் தொடராமலிருக்கும்படி நான் பார்த்துக் கொள்கிறேன். அதற்கு நான் உத்தரவாதி; என் பிள்ளை சற்புத்திரன்; என் சொல்லை ஒரு நாளும் மீறமாட்டான்; பெண்ணுடைய உயிருக்கு ஆபத்து வந்தாலும் வரட்டும்; செய்யுங்கள்- என்றாள்.

துரையின் கோபம் முன்னிலும் அதிகரித்தது. “உன் சொல்படி அவர் கேட்பாரென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது ஆகையால், இதைப்பற்றி திரும்பத் திரும்பச் சொல்வதில் பயனில்லை. வீணில் என்னை வதைத்தால், நான் இனிமேல் இங்கே வரமாட்டேன். தற்கால சாந்தியாக நான் கொடுத்து வரும் மருந்தையே இப்போதும் கொடுத்து விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/225&oldid=1252400" இலிருந்து மீள்விக்கப்பட்டது