பக்கம்:மேனகா 2.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

மேனகா

வந்து கூடி, தங்கம்மாள் பரிதாபகரமாகக் கிடந்ததைக் கண்டு விசனித்து நின்றனர்.

அந்தச் சமயத்தில் ஒரு தபாற் சேவகன் அவளிடத்தில் தோன்றி கனகம்மாள் யாரென்று உரக்கக் கேட்டான்; அதைக் கேட்ட யாவரும் திடுக்கிட்டு அவனது பக்கம் திரும்பினார்கள். கனகம்மாள் கிட்டன் ஆகிய இருவரும் தமது அழுகையைச் சட்டென்று நிறுத்தி அவன் என்ன சொல்லப் போகிறானோ வென்று ஆவலோடு அவனது முகத்தைப் பார்த்தனர்.

அவன், “கனகம்மாள் யார்?” என்று இன்னொரு முறை கேட்க அவள், “நான்தான்” என்றாள்.

அங்கிருந்த ஜனங்கள் யாவருக்கும் அந்த ஒரு நொடியும் ஒரு யுகமாய்த் தோன்றியது. அப்பொழுது தபாற்காரன், “உனக்கு முன்னூறு ரூபாய் தந்தி மணியார்டர் வந்திருக்கிறது; கையெழுத்துப் போடத் தெரியுமா?” என்றான்.

கனகம்மாள் தனது செவிகளை நம்பாமல் திகைத்தவளாய், “தெரியும்” என்றாள். அவன் உடனே அவளுக்கருகில் உட்கார்ந்து அவளது கையெழுத்தையும் இரண்டு சாட்சிகளின் கையெழுத்துக்களையும் வாங்கிக்கொண்டு முன்னூறு ரூபாய் எண்ணி அவளிடம் கொடுத்து விட்டு எழுந்து வெளியில் போய்விட்டான். அந்தப் பணம் யாரால் அனுப்பப்பட்ட தென்பதையும் கேட்காமலிருந்த கனகம்மாள் பணத்தை ஒரு பக்கத்தில் போட்டு விட்டு மேலும் அழத்தொடங்கினாள். “இந்தப்பணம் இரண்டு நாழிகைக்கு முன் வந்திருக்கக் கூடாதா? உயிர் போனபின் எதற்காக வந்ததோ?” என்று கதறியழுதாள். அந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்ட ஜனங்கள் யாவரும் மிகவும் இரங்கி விசனித்து அவ்விடத்தை விட்டுப் போக மனமற்று நின்றனர். அவ்வாறு அரை நாழிகை சென்றது; கூட்டத்திலிருந்த ஒரு பெண்பிள்ளை தங்கம்மாள் கிடந்த தொட்டிலிற்கருகில் நெருங்கி அவளை உற்று நோக்கி;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/231&oldid=1252407" இலிருந்து மீள்விக்கப்பட்டது