பக்கம்:மேனகா 2.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேய்க் கூத்து

243

கோமளம்! மணி எவ்வளவு என்று பார்; என்னைச் சரியாக ஐந்து மணிக்கு டாக்டர் வரச் சொன்னார்.

கோம:- ஏனடா சா மா ! இப்போது வராகசாமி வரும்போது, கூடவே அந்த வெள்ளைக்காரத் தாதியும் வருவா?

சாமா:- ஆம்.

கோம:- அவளுக்கு நாம்தான் சாதம் போடவேண்டுமா?

பெரு:- அந்தப் பறைக்கழுதைக்கு நாமேன் சாதம் போடுகிறது? கூடப் பிறந்தவர்களான நமக்கில்லாத அக்கறையும், பொறுப்பும் வழியில் போகிற சிறுக்கிக்கு வந்து விட்டதோ? என்னவோ நமக்குக் காரியம் ஆகவேண்டுமே என்று அதற்கு ஒப்புக்கொண்டேன். அவள் வந்தால் இரண்டு நாளைக்கு ஒரு மூலையில் விழுந்து கிடந்து விட்டுத் தொலையட்டும். போன ஜென்மத்தில் அவளிடம் நாம் கடன் பட்டிருக்கிறோம். அதை அவள் வாங்கிக் கொண்டு போகட்டும்.

கோம:- அடே சாமா! மணி 4.30 ஆகிறது.

சாமா:- சரி; நான் போய் வராகசாமியை அழைத்துக் கொண்டு இன்னம் அரைமணியில் வருகிறேன்- என்று சொல்லி விட்டு வெளிப்பட்டார். அதன் பிறகு பெண்டிருவரும் மிகவும் ஆவலோடு வழி பார்த்திருந்தனர். சரியாக ஐந்தேகால் மணியாற்று. வாசலில் மோட்டார் வண்டி வந்த ஒசை கேட்டது. உடனே சகோதரிமாரிருவரும் குதித்துக் கொண்டு வெளியில் ஓடினர்.


★★★★★★★★★★
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/244&oldid=1252420" இலிருந்து மீள்விக்கப்பட்டது