பக்கம்:மேனகா 2.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

255

கலியாணம் நடந்துபோகு மென்பது என்ன நிச்சயம்; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது போவதில்லையா? ஈசுவரனே துணை என்று அவனை நாம் முற்றிலும் நம்பி நல்ல வழியில் முயற்சிசெய்தால், அவன் நம்மை எப்படியும் காப்பான். நீங்கள் இதற்குள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். தைரியமாக இருங்கள் இந்த விஷயத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நமது டாக்டர் துரைஸானிக்கு உங்களிடம் அந்தரங்கமான அன்பும் அபிமானமும் உண்டு. அவர்களை உடனே வரவழைத்து, விஷயத்தைத் தெரிவித்து, அவர்களுடைய உதவியை நாம் நாடுவோமானால், அவர்கள் ஏதாகிலும் தக்கயோசனை செய்து கலியாணத்தை நிறுத்தி வைக்கும்படி செய்வார்கள். உங்களுடைய குடும்ப விஷயங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரியும். அவர்களிடம் நீங்கள் பேசவேண்டாம். நானே பேசி காரியத்தை முடிக்கிறேன். அவர்களால் இந்தக் காரியம் முடியுமென்று எனக்குப் பூரண நம்பிக்கை யிருக்கிறது” என்றாள்.

வராக:- அது நல்ல யோசனைதான்; ஆனால் துரை ஸானியை இப்போது யார் போய் அழைத்துக் கொண்டு வருகிறது? •

பணிப்பெண்:- இதோ டெலிபோன் (Telephone) இருக்கிறதே! இந்த வழியாக நான் கூப்பிட்டு இப்போதே பேசுகிறேன் - என்றாள்.

அந்த இன்பவல்லியின் சமயோசிதமான கூரிய புத்தி யைப் பற்றி அவன் மிகவும் மகிழ்ந்தவனாய், அப்படியே செய்யும்படி அநுமதித்தான்; அந்தப் பணிமங்கை, உடனே எழுந்துபோய் டெலிபோன் வாயிலாக டாக்டர் துரைஸானியுடன் பேசிவிட்டு வந்தாள்.

அப்போது அவர்களிருந்த அறையின் கதவு திறக்கப் பட்டது. “அண்ணா! அண்ணா!” என்று மெல்ல அழைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/256&oldid=1252432" இலிருந்து மீள்விக்கப்பட்டது