பக்கம்:மேனகா 2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

257

அந்தக் கடிதம் தனக்கே வந்ததென்று தீர்மானித்துக் கொண்ட வராகசாமி அதிகரித்த வியப்போடு, மேலே என்ன எழுதப்பட்டிருக்கிறதென்று அறிய ஆவல் கொண்டு படிக்க வாரம்பித்தான்.


கடிதம்

ஐயா!

பெருத்த கற்றையாக அனுப்பப்பட்டிருக்கும் இந்தக் காகிதத்தைக்கண்டவுடன் உங்களுக்கு நிச்சயமாக ஆச்சரியமும் திகைப்பும் உண்டாகுமென்று நான் நம்புகிறேன். இது உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமான விஷயமா கையால், இதை அசட்டை செய்யாமலும் முற்றிலும் வாசித்து எனக்கு மறுமொழி எழுதுவீர்களென்று நம்புகிறேன். கீழே குறிக்கப்பட்டிருக்கும் விஷயங்களை நான் அறிந்து கொண்டது தெய்வத்தின் செய லென்றே தோன்றுகிறது. இந்த விஷயங்களை உங்களுக்குத் தெரிவித்தால், நீங்கள் இதனால் பெருத்த நன்மைகளை அடைவீர்களென்று நினைத்தே இதை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.

ஐந்து நாட்களுக்கு முன் நான் என்னுடைய சொந்த அலுவலின் நிமிர்த்தமாய் தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிற்குப் போனேன்; உங்கள் வீட்டிற்குள்ளிருந்து ஒரு முகம்மதியன் வெளியில் வந்ததைக் கண்டேன். அவனுடைய வேஷமும், கபடப்பார்வையும் என் மனதில் உடனே ஒரு வகையான சந்தேகத்தை உண்டாக்கின. அவன் வாசலில் வந்தவுடன் திருடனைப்போல அங்கு மிங்கும் பார்த்துக் கொண்டு தன்னுடைய கையிலிருந்த ஏதோ ஒரு காகிதத்தை மடித்து, சட்டைப்பைக்குள் இரகசியமாகச் சொருகி மறைத்துக் கொண்டான்; அந்தக் கண்டவுடன் என்னுடைய சந்தேகம் வலுத்தது; முற்றிலும் பிரம்மண ஜாதியார் வசிக்கும் அந்தத்

மே.கா.II-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/258&oldid=1252434" இலிருந்து மீள்விக்கப்பட்டது