பக்கம்:மேனகா 2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

மேனகா

ருஜுப்படுத்தி யிருப்பதற்காக, நான் அடையும் ஆநந்தம் என் மனதில் அடங்கவே இல்லை. இதற்காக நான் அந்தக் கருணைவள்ளலை என் மனதார வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுடைய பல ஹீனமான நிலைமையில் இந்த ரகசியங்கள் வெளிப்பட்டு, உங்களைப் பொறுக்க முடியாத வாதைக்கு உள்ளாக்கிவிட்டதே என்பதே பெருத்த விசனமாக இருக்கிறது. தயவு செய்து கோபத்தை அடக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய மனைவி தற்கொலை செய்து கொண்டது சரியான காரிய மாகையால், அதைப்பற்றி நீங்கள் விசனப்பட நியாயமில்லை. இப்போது உங்களுடைய வீட்டில் அன்னியர் பலர் வந்திருக்கின்றனர். அவர்கள் முன்பு இந்த அசங்கியமான விஷயங்கள் வெளியாவது உங்களுக்கு அவமானமல்லவா; அதையும் உங்களுடைய தேக நிலைமையையும் கருதி நீங்கள் இப்போது ஆத்திரத்தை அடக்கிக் கொள்ளுங்கள். இன்னம் நாலைந்து நாட்கள் பொறுப்பதனால், காரியம் கெட்டுப் போகாது. நீங்கள் செய்ய வேண்டுவதை அப்புறம் செய்து கொள்ளலாம். செய்ததை என்னவோ செய்து விட்டார்கள்; உங்களுடைய மனைவியோ திரும்பாமல் போய்விட்டாள். இப்போது நீங்கள் சண்டையிடுவதினால் போனவள் வரப்போகிறதில்லை. வீணில் உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள். என் மேல் உங்களுக்கு உண்மையில் அன்பிருக்குமானால், என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, அதை மெய்ப்பிக்க வேண்டும்” என்று மிகவும் உருக்கமாகக் கூறி அவனது மோவாயைப் பிடித்து வேண்டினாள்.

அந்த மோகனாங்கியின் வலையில் முற்றிலும் வீழ்ந்து கிடந்த வராகசாமியின் மன நிலைமை அதனால் ஒருவாறு தளர்வடைந்தது. என்றாலும், அவனது ஆத்திரம் இன்னமும் அப்படியே இருந்தது. “ஆகா! என்ன காரியம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/269&oldid=1252445" இலிருந்து மீள்விக்கப்பட்டது