பக்கம்:மேனகா 2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

மேனகா

உருக்கமான சொற்களைக் கேட்ட அந்த மடந்தை, “ஆகா! மேனகாவின் பாக்கியமே பாக்கியம்! இவ்வளவு உறுதியும், அருமையான குணமும் வாய்ந்த ஏகபத்தினி விரதரான உங்களைப் புருஷனாக அடைந்த மேனகா வுக்கு அந்த ஈசுவரனும் நிகரில்லை; சுவர்க்கமும் நிகரில்லை. அவளுக்கு இதைப் பார்க்கிலும் பிரம்மாநந்தம் வேறுண்டோ! நீங்கள் சொல்வதெல்லம் சரியான நியாயந்தான். அவள் இப்போது உயிரோடிருந்தால், அவள் மேல் எவ்விதமான தோஷமும் கற்பியாமலும், அவளிடம் கொஞ்சமும் அருவருப் பில்லாமலும் அவளைச் சம்சாரமாக ஒப்புக் கொள்வீர்களா? அல்லது, இராமன் சீதையை நெருப்பில் விழுந்து விட்டு வரச் சொன்னதைப்போல நீங்களும் ஏதாவது ஆட்சேபனை சொல்லுவீர்களா?” என்றாள்.

அதைக் கேட்ட வராகசாமி, “அடாடா! அவளை உயிரோடு காணும் அதிர்ஷ்டம் இனிமேல் எனக்கு உண்டாகுமா? அவளைத் தான் உயிரோடு அள்ளிக் கொடுத்து விட்டேனே! அவளை அழைத்துக் கொள்வேனா என்ற சந்தேகங்கூடவா கொள்ள வேண்டும்! அவள் மாத்திரம் திரும்பி வருவாளானால், அவளை என் குல தெய்வமாக வல்லவா வைத்து வணங்குவேன். மாசற்ற பத்தரைமாற்றுத் தங்கமாகிய என்னுடைய மேனகாவை இந்த ஜென்மத்தில் நான் இனிமேல் காணப்போகிறேனா!” என்று கரைகடந்த ஏக்கமும் விசனமும் அடைந்தவனாய் வருந்திக் கூறினான்; அதைக் கேட்ட அந்த மடமங்கை மிகவும் புன்னகைக் கொண்டு, “அப்படியானால் மேனகாவை ஏற்றுக் கொள்ளுங்கள். அவள் இந்த வெள்ளைக் காரியின் உடைக்குள் மறைந்துகொண்டிருக்கிறாள். அவள் இதுவரையில் எமலோகத்தில் இருந்தாள்; இப்போது சுவர்க்கலோகத்துக்கு வந்து விட்டாள் என்று கூறிய வண்ணம், அதுவரையில் கழற்றாத வெள்ளைக்காரத் தொப்பியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/285&oldid=1252462" இலிருந்து மீள்விக்கப்பட்டது