பக்கம்:மேனகா 2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டு முதல்

327


கனக:- நல்ல யோசனைதான். அவனுக்கு இங்கேயே ஏதாவது உத்தியோகமும் செய்து வைத்து விடலாம்- என்றாள்.

அப்போது அந்த அறையின் வாசற்படியில் ஒசையின்றி இன்னொரு சேவகன் வந்து நின்று, ரெங்கராஜுவைப் பார்த்து ஒரு தபாற்கடிதத்தை நீட்டினான்; அதைக் கண்ட ரெங்கராஜு விரைவாகப் போய் அந்தக் கடிதத்தை வாங்கி, சாம்பசிவத் தினிடம் சென்று பணிவாக நீட்டினான். அதை அவர் வாங்கி மேல் விலாசத்தைப் பார்த்து விட்டு, “குழந்தை மேனகாவுக்கு வந்திருக்கிறது; கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வா!” என்றார். அதைக் கேட்ட கனகம்மாள், “எந்த ஊர் முத்திரை போட்டிருக்கிறது பார்!” என்றாள்.

சாம்பசிவம் அதைப் பார்த்து, “பட்டணத்திலிருந்து வந்திருக்கிறது” என்றார்.

கனகம்மாள், “நூர்ஜஹான் எழுதியிருப்பாள்; சரி; சீக்கிரமாய்க் கொண்டுபோய்க் கொடு. மாப்பிள்ளையும் உள்ளே இருக்கிறார். வெளியிலிருந்தே கூப்பிட்டுக் கொடு” என்று கூறினாள்.

உடனே ரெங்கராஜு அதை வாங்கிக் கொண்டு மூன்றாவது மாடிக்கு ஏறிச் சென்றான்.

மூன்றாவது மாடத்தில் இந்திர விமானம் போலவும், மன்மதனது சயனக்கிரகம் போலவும் கட்டில்கள், மெத்தைகள், ஸோபாக்கள், படங்கள், நிலைக்கண்ணாடிகள், மின்சார விசிறிகள், முதலிய எண்ணிறந்த பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த கூடத்தில் ஸோபாவைப்போல மெத்தை தைத்த பெருத்த நாற்காலி யொன்றில் வராகசாமி சந்தோஷமாய் சாய்ந்துகொண்டிருந்தான். அவனது காதிலும், கைகளிலும் வைரங்கள் ஜிலுஜிலென்று மின்னின. இரத்தின கம்பளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/328&oldid=1252780" இலிருந்து மீள்விக்கப்பட்டது