பக்கம்:மேனகா 2.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

மேனகா

சந்தேகமும் கொள்ளத் தகுந்த விதத்தில் ஒழுகுவதும் மேனகாவுக்குச் சிறிதும் பழக்கமில்லை. துலையில் கனமுள்ள தட்டு தாழும், கனமில்லாதது உயரும் என்பதைப்போல, அடங்கி வொடுங்கி, இன்பங் கொடுப்பதாம் இன்பமடைந்து, அன்போடு வாழ்வதே அழகிய வாழ்வென நினைத்து, அவள் படிதாண்டாப் பத்தினியாக இருந்து, கண்டோர் வியக்கும் வண்ணம் நடந்து, பெண் தெய்வம் போல இருந்து வந்தாள்.

இத்தகைய அரிய இளங்காதலர் இருவரும் முன் சொன்னவாறு மகிழ்வே உருவாக உட்கார்ந்திருந்தபோது, ரெங்கராஜு வாசற்கதவை மெதுவாகத் தட்டி, “அம்மா! அம்மா!” என்று கூப்பிட்டான்.

அவனது குரலை அறிந்த மேனகா திடுக்கிட்டெழுந்து வந்து கதவைத் திறக்க, சென்னையிலிருந்து வந்த கடிதத்தை அவன் மரியாதையாக அவளிடம் கொடுத்துவிட்டு அப்பாற் சென்றான்; அது தனது கணவனுக்கு வந்ததோ வென்று ஐயமுற்று அவள் உடனே மேல் விலாசத்தைப் பார்த்தாள். அதில் தனது பெயரே இருந்ததையும், அது நூர்ஜஹானது கையெழுத்தாக இருந்ததையும் காணவே, அவளது முகத்தில் அன்பும் ஆநந்தமும் பூத்தன; “நூர்ஜஹான் கடிதம் எழுதி யிருக்கிறாள்” என்று குயில்போல இனிமையாகக் கூறிய வண்ணம் அவனுக்கருகில் வந்தாள்; சமீபத்தில் வந்த அப்பொற்கொடியை வராகசாமி கரைகடந்த அன்போடு இழுத்து, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் தனது பக்கத்தில் உட்கார வைத்து, இடது கரத்தால் அவளை அனைத்துக் கொண்டு, “எங்கே வாசி; என்ன எழுதியிருக்காள் என்று பார்க்கலாம்” என்று கூற, மேனகா கடிதத்தைப் பிரித்து, அடியில் வருமாறு படிக்கலானாள்:-

“அரிய சகோதரீ! மேனகா! நீ மிகுந்த அன்போடு எனக் கெழுதிய கடைசி கடிதம் வந்தது. பார்த்து நிரம்பவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/331&oldid=1252783" இலிருந்து மீள்விக்கப்பட்டது