பக்கம்:மேனகா 2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டு முதல்

333

எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அவமானத்தைச் சகிக்க மாட்டாமல் அவர்கள் கிணற்றில், குளத்தில் விழுந்து உயிரை விட்டார்களோ, அல்லது தூரதேசத்திற்குப் போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ ஒன்றும் தெரியவில்லை. பிறவியி லேயே துர்புத்தியைக் கொண்டு அதிலேயே பழகிவந்தார்கள். எப்போதும் அதன் படியேதான் நடந்து கொண்டிருப்பார்கள். பிறர் எவ்வளவு நற்புத்தி புகட்டினாலும், வருந்தினாலும் அவர்களது மனமும் குணமும் நடத்தையும் மாறவே மாறா தென்பது உலக அநுபவ மல்லவா தவிர நீயோ மிகவும் தயாள குணமுடையவள்; உன்னுடைய நாத்திமார்கள் திரும்பி வந்தாலும் அவர்களைச் சிறிதும் துன்பப் படுத்த உனக்கு மனமிராது. நிற்க, அப்படிப்பட்ட கொடியதுஷ்டர்களை நீங்கள் உங்களோடு கூடவைத்துக் கொள்ளுவதும் தவறு, ஆதலால், அவர்கள் இவ்வாறு காணாமற் போனதே அநுகூலமான காரிய மென்பது என்னுடைய நினைவு; நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது பொய்யாகாதல்லவா!

ஆனால், என்னுடைய எஜமானர் மறுபடியும் இவ்வளவு நல்லவராக மாறு வாரென்று நான் கனவிலும் நினைக்க வில்லை. ஆண்டவனருளால் நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருந்து வருகிறேன். உன்னை இன்னொரு முறை எப்போது பார்ப்போ மென்னும் ஆவல் ஒன்றே என் மனத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கும் ஆண்ட வனுடைய அருள் எப்போது உண்டாகுமோ தெரியவில்லை.

நான் இன்று காலையில் நமது டாக்டர் துரைஸானியைப் பார்த்து, நீ அனுப்பிய சன்மானமாகிய ரூபாய் ஆயிரத்தையும் அந்த அம்மாளிடம் சேர்ப்பித்தேன். அதைப் பெற்றுக் கொள்ளவே அவர்கள் சம்மதிக்கவில்லை. ஆனால், உன் விஷயத்தில் அவர்கள் வைத்திருக்கும் அந்தரங்கமான அன்பை என்னவென்று சொல்வேன்! நீயும் புருஷனுமாக நீடுழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/334&oldid=1252786" இலிருந்து மீள்விக்கப்பட்டது