பக்கம்:மேனகா 2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம்பாச்சாரி விலாசம்

35

விசாலமான வீட்டிலேதான் அவன் இப்போதிருக்க வேண்டுமாம். இப்போது அவர்கள் குடியிருப்பது மிகவும் சிறிய வீடு; காற்று ஒட்டம் இல்லாதது. கரையோரத்தில் ஒரு பங்களா இருக்கிறது. அதை அவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டு இன்னம் இரண்டு மூன்று நாட்களில் கிரகப் பிரவேசம் செய்யப் போகிறார்கள். அந்தப் பங்களாவுக்கு நாலைந்து நாளில் வராகசாமியை அழைத்து வரப்போகிறோம். கடற்காற்று வீசினால் அவன் சீக்கிரம் குணமடைந்துவிடுவான்.

வரதா:- இந்த நிலைமையில் கலியாணம் செய்துகொள்ள அவன் சம்மதிப்பானா?

சாமா:- அதைப்பற்றி கவலைப்படாதே! நானும் அவன் தமக்கையும் சொல்வதை அவன் ஒரு நாளும் மீறமாட்டான். தவிர, இந்த விஷயத்தில், நாங்கள் இன்னொரு யோசனை செய்திருக்கிறோம். இப்போது நாங்கள் வாங்கப்போகும் பங்களாவின் விலை ரூபா பதினாயிரம். அவனுடைய தமக்கை, அவனுக்குத் தெரியாமல் பதினாயிரம் ரூபா சிறுவாடு சேர்த்து வைத்திருந்தாள். அவன் வருமுன், இந்தப் பணத்தைக் கொடுத்து பங்களாவை என் பேருக்கு வாங்கப்போகிறோம். கலியாணத்துக்காக, நீ பதினாயிரம் ரூபா கொடுத்ததாகவும் அதனால் பங்களாவை வாங்கினதாகவும் சொல்லப் போகிறோம். உன்னிடம் வாங்கின பிறகு, கலியாணம் வேண்டாமென்று அவன் சொல்ல மாட்டானல்லவா- என்றார்.

வரதா:- பங்களா வை உன்பேரில் ஏன் வாங்கப் போகிறீர்கள்

சாமா:- பங்களாவுக்குச் சொந்தக்காரன் நம்முடைய நைனா முகம்மதுவின் சிற்றப்பன். அவன் மற்றவருக் கென்றால் அதை பன்னிராயிரம் ரூபாய்க்குத்தான் கொடுப்பான். எனக்கு இரண்டாயிரம் ரூபா குறைப்பான். அதனால் என்பேரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/37&oldid=1251850" இலிருந்து மீள்விக்கப்பட்டது