பக்கம்:மேனகா 2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மேனகா

வாங்கப்போகிறோம். அப்புறம் பெருந்தேவி பேரில் மாற்றப்போகிறோம்.

வரதா:- அப்படியானால், கலியாணத்துக்காக நான் கொடுக்க வேண்டிய பதினாயிரம் ரூபாயைக் கொடுக்க வேண்டாமா?

சாமா:- நல்லகாரியம் செய்தாய்! நாங்கள் வராகசாமிக்காக இந்தக் கட்டுக்கதையைச் சொல்லப்பே கிறோம். உன்னிடமிருந்து பதினாயிரம் ரூபா வாங்கவேண்டு மென்னும் பேராசையினாலே தான் பெருந்தேவி கலியாணத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கிறாள். பணத்தை ரகசியமாக உன்னிடமிருந்து வாங்கி தன்னிடம் கொடுக்க வேண்டு மென்று அவள என்னிடம் சொல்லியிருக்கிறாள். பணம் வராவிட்டால், பெண் அழகாயில்லை என்று ஏதாயினும் காரணம் சொல்லி கலியாணத்தை நிறுத்திவிடுவாள். ஆகையால் தந்திரமாக அவளை ஏமாற்ற வேண்டும்.

வரதா:- எப்படி தந்திரம் செய்கிறது?

சாமா:- அவளிடம் உன்னைப்பற்றி நான் மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறேன். நீ ஒரு வேலை செய்; இருநூறு, முன்நூறு ரூபாயை அரையனா, காலணாவாக மாற்றி ஒரு சாக்கு மூட்டையில் அதைப்போட்டு இன்னமும் ஒட்டுத்துண்டு களையும், அதில் போட்டு பெருத்த மூட்டையாகப் போட்டுக்கொண்டு வந்து சேர். பணம் தேவையான போதெல்லாம் அதிலிருந்து அலட்சியமாக எடுத்து வீசி ஆடம்பரம் செய். அதைக் கண்டு அவள் ஏமாறிப்போவாள். அவளுக்கெதிரில், நான் உன்னிடம் வந்து வரதட்சணை எங்கே யென்று கேட்பேன். “இதோ அடுத்த ரயிலில் பெண்ணின் அம்மான் பணம் கொண்டு வருவார்; காரியம் நடக்கட்டும், தாலி கட்டுமுன் வந்துவிடும்” என்று சொல்லிக் கொண்டிரு. அவள் சந்தேகப்படாதபடி நானும் அவளுக்கு உறுதி சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/38&oldid=1251851" இலிருந்து மீள்விக்கப்பட்டது