பக்கம்:மேனகா 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மேனகா

போகிறீர்கள்?” என்று பணிவாகக் கேட்டான். அவர், “நாகைப்பட்டணம் போகிறேன்” என்றார். அந்த மனிதன், “சரி நிரம்ப சந்தோஷம், இந்தக் குழந்தை திருவாரூர் வரையில் வருகிறாள். இவளை அதுவரையில் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். சாமாவையர் மிகுந்த பரோபகார குணம் பிரகாசித்த இனிய முகத்தைக் காட்டி, “அப்படியே செய்கிறேனப்பா! கவலைப்படாதே; என் தங்கையைப்போலப் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். அப்போது வண்டி ஊதிக்கொண்டு நகர்ந்தது. அந்த அழகிய பெண்மணி சகிக்கவொண்ணாத நாணத்தினால் தனது தேகத்தை தெளித்துக்கொண்டு, “நான் போய் வருகிறேன்” என்று குயிலைப்போல மொழிந்து, வெளியிலிருந்த மனிதனிடம் விடைபெற்றுக் கொண்டாள். அதற்குள் வண்டி விசையாக ஒடியதால், அந்த மனிதன் நெடுந்துரத்திற் கப்பால் பின் தங்கிவிட்டான்.


19 வது அதிகாரம்

மலையாள பகவதி

ந்த வண்டியில் ஏறுமுன் அப்பெண்பாவை பல வண்டிகளை ஆராய்ந்துகொண்டே வந்தாள். தான் தனிமையாகச் செல்லுவதால் அவள் வெற்று வண்டியில் ஏற அஞ்சினாள். மனிதர் இருந்த வண்டிகளில் பார்வைக்கு அருவருப்பை உண்டாக்காத, திருப்திகரமான சகாப்பிரயாணி எந்த வண்டியில் இருக்கிறான் என்று ஆராய்ந்து சாமாவையரைக் கண்ணுற்றாள். உடனே அவளது மனதில், அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/44&oldid=1251857" இலிருந்து மீள்விக்கப்பட்டது