பக்கம்:மேனகா 2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

49

அருகிலிருந்த வாழைத் தோட்டங்களில் இரதங்களின் கீழ் அழகிய தாதியர் சாமரையைத் தாங்கி நிற்றலைப்போல அகன்ற இலைப்பரப்பின் கீழ் வாழை மரங்கள் பழத்தாறுகளையும் பெருத்த பூக்களையும் தாங்கி நின்ற காட்சி, சாமாவையரையும் கமலத்தையும் ஊர்வலமாக அழைத்துச் செல்ல, வரிசைகளுடன் கலியாணப் பந்தலுக் கருகில் நிற்கும் இரதக் கோலத்தைப் போல விருந்தது. பெருத்த தேன் இறால்களைக் கொண்ட கரும்புப் பயிர், ஈட்டி கேடயம் முதலிய படைகள் ஊர்வலத்திற்கு அணி வகுக்கப்பட்டு நிற்றலைப்போல இருந்தது. இடை யிடையே தோன்றிய நந்தவனங்களிலும் பங்களாக்களிலும் இருந்தெழுந்த பூக்களின் நறுமணங்களையும், மகரந்தப் பொடியையும், தண்ணீர்த் திவலைகளையும் தென்றல் சுமந்து, வண்டிக்குள் புகுந்து ஒவ்வொருவருக்கும் ஊர்வலத்தின் பொருட்டு பன்னீர் தெளித்து வாசனை யூட்டித் தாம்பூலம் கொடுப்பது போல இருந்தது. இத்தகைய இனிய பொருட்களின் காட்சியிலும், எண்ணிறந்த இன்பங்களின் பெருக்கிலும் ஆழ்ந்து, ரயில் வண்டியிற் என்ற ஏனைய ஜனங்கள் யாவரும் துயிலாகிய கள்ளையுண்டு, மயங்கி பிரம்மாநந்த நிலை யடைந்து அசைந்தாடி பக்கத்திலிருந்த பலகைகளிலும் ஒருவர் மீதொருவர் மோதிக்கொண்டனர். நமது இரத்த கலப்பு (Blood Relations ) சந்ததியாரான மூட்டை பூச்சிகள் சாமாவையர் வந்த வைபவத்தைக் குறித்துப் பெருத்த விருந்துண்டு கொண்டிருந்தன. ஆனால் நமது கமலாவோ, மூன்று நாட்கள் ஒரே மூச்சாகத் துயின்று அப்போதே விழித்தவள் போல சிறிதும் கலக்கமும் அயர்வு மின்றித் தனது கண்களை நன்றாக விழித்துக்கொண்டு தன் மனதை ஏதோ ஒரு நினைவில் செலுத்தியிருந்தாள். அன்றிரவில் தனக்குக் கிடைக்கப்போகும் பெரும் பாக்கியத்தைப்பற்றி அவள் கனவில் நினையாதவளாயும், தனது மன்மதபாணங்கள் சாமாவையரது மனதில் எவ்வித மான அநர்த்தங்களை விளைவித்தன வென்பதை உள்ளவாறு

மே.கா.II-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/51&oldid=1251882" இலிருந்து மீள்விக்கப்பட்டது