பக்கம்:மேனகா 2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

75

இன்னொரு புறத்தில் இரண்டு நாற்காலிகளும், ஒரு சோபாவும் இருந்தன. கட்டிலினருகில் சுவரில் ஒரு பெருத்த நிலைக் கண்ணாடி மாட்டப் பட்டிருந்தது. எங்கும் படங்களும், பதுமைகளும் நிறைந்து கண்ணைக் கவர்ந்தன. தான் கொணர்ந்த பொருட்களை மேஜைமீது வைத்த கமலம் ஐயரைப் பார்த்து, “இதுதான் என்னுடைய வைத்தியசாலை; மருந்து கொடுக்கிறேன். இப்படிக் கட்டிலின்மேல் அமருங்கள்” என்று கூற, அவர் பிரம்மாநந்தம் அடைந்தவராய்க் கட்டிலின்மேல் உட்கார்ந்தார். அது வில் வைக்கப்பட்ட கட்டிலாகையால், மகாகனம் பொருந்திய ஐயரவர்கள் ரப்பர் பந்தைப் போலத் தணிந்து தணிந்து உயர்ந்தார். அப்போது கமலம், “என்னுடைய தாயார் பால்வாங்க அடுத்த வீட்டிற்குப் போயிருக்கிறாள். சீக்கிரம் வந்துவிடுவாள். அதுவரையில் இந்தக் காரியம் ஆகட்டும்” என்று சொல்லி விட்டு அருகிலிருந்த மிட்டாயி பட்சணங்கள் முதலியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அவரது வாயில் அன்போடு ஊட்ட ஆரம்பித்தாள். அதைக் கண்டு ஆனந்தபரவச மடைந்த ஐயர் அவளை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டே பலகாரங்களைத் தின்ன ஆரம்பித்தார். அவள் எதையும் உட் கொள்ளா திருந்ததைக் காண அவருக்குச் சகிக்கவில்லை. உடனே அவரும் சிலவற்றை எடுத்து அவளது வாயில் போட முயல, அவள், “எனக்கு வேண்டாம். உங்களுடனிருப்பதே எனக்கு மிட்டாயிக்கும் அதிகமான இனிப்பைத் தருகிறது. நான் இப்போது அடைந்து கொண்டிருக்கும் பிரம்மானந்த சுகத்திற்கு இந்த மிட்டாயின் ருசி உறைபோடக் காணுமா? நீங்கள் என் கட்டிக்கரும்பல்லவா! அத்தனையும் முத்து அதிமதுரக் கற்கண்டல்லவா” என்று கூறி மிகுந்த மோகாவேசத்தோடு அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள். சாமாவையர் பேரின்ப சாகரத்தில் மிதக்க ஆரம்பித்தார். அப்போது கமலம், “அதிருக்கட்டும்; நாம் இவ்வளவு அந்தரங்க நண்பர்களாகி விட்டோமே. நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/76&oldid=1251913" இலிருந்து மீள்விக்கப்பட்டது