பக்கம்:மேனகா 2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மேனகா

மூட்டையைப் போலக்கிடந்த சாமாவையரை வேறிருவர் தூக்கி அதற்குள் புகுத்திக் கயிற்றைக் கொண்டு நன்றாக கட்டினர். அடுத்த நிமிஷம் ஐயரவர்கள் இரண்டு மனிதர்களின் கைகளின் மீது ஆரோகணித்தவராய் ஊர்வலம் செல்ல எழுந்தார். கொல்லைப்புற வாசலின் வழியாக விரைந்து சென்று, சிறிது துரத்தில் குறுக்கிட்ட ஒடம்போக்கி ஆற்றை அடைந்தனர். அதில் தண்ணீர் இடுப்பளவு ஓடிக் கொண்டிருந்தது. திருடர்கள் மூட்டையை அதில் போட்டுவிட நினைத்தனர். அப்போது அவர்களில் ஒருவன் ஆற்றில் போட்டால், ஒரு வேளை கரையில் ஒதுக்கப்பட்டு அவன் பிழைத்துக் கொள்வானென்றும், அதனால் கமலத்துக்குத் துன்பமுண்டாகுமென்றும், ஆகையால் அருகிலிருந்த ரயில் பாதையில் தண்டவாளத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டால் மனிதன் நிச்சயமாக துகையலாய் விடுவா னென்றும் கூற, மற்றவர் அதுவே சரியென்று ஒப்புக்கொண்டனர். அடுத்த நிமிஷம் அவர்கள் ரயில் பாதையை யடைந்து மூட்டையை ஒரு தண்டவாளத்தினடியில் விடப்பட்டிருந்த இடைவெளியில் ஒரு கயிற்றைக் கொடுத்து அதனால் மூட்டையைத் தண்டவாளத் தோடு சேர்த்து இறுக்கிக் கட்டிவிட்டு திருடர்கள் போயினர்.

ஐயர் மூச்சுவிட மாட்டாமல் தத்தளித்து மரண வேதனையடைந்து தண்டவாளத்தின் மீது கிடந்தார். கை கால்களில் இரத்த ஒட்டம் நின்று போனதாகையால் பெருந்துன்பம் அநுபவித்தார். அப்போது நெடுந்துரத்திற் கப்பால் ரயில் வருவதைப்போல ஒசை உண்டானதைக் கேட்டார். அவருடைய மனோ மெய்களின் அப்போதைய நிலைமை எப்படி இருந்திருக்கும். இன்னம் சில நிமிஷங்களில் தாம் ரயிலில் அகப்பட்டுத் துகையலாய் விடுவோமென்று நினைத்துப் பேரச்சங்கொண்டு நரகவேதனை அநுபவித்தார்.



★★★★★★★★★★★★
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/81&oldid=1251927" இலிருந்து மீள்விக்கப்பட்டது