பக்கம்:மேனகா 2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

95

நினைக்கிறேன். விஷயங்களை நீங்கள் சொல்லலாம்; என்னால் என்ன காரியம் ஆக வேண்டுமோ, அதை நான் உடனே செய்து முடிக்கிறேன். தங்களுக்குப் புலிப்பால் தேவையானாலும் உடனே கொண்டு வருவேன் என்று உறுதியாகக் கூறினார்.

அந்த உறுதியான மொழியைக் கேட்ட பெரியதம்பி மரக்காயர் மிகவும் நம்பிக்கையடைந்தார்; சஞ்சீவி ஐயரோடு அரைநாழிகை வரையில் இரகசியமாகப் பேசி, மேனகாவின் பெட்டியிலிருந்து அகப்பட்ட கடிதங்கள் முதலிய பல விஷயங்களை அவரிடம் தெரிவித்து, மேல் ஆகவேண்டிய வற்றிற்கு அவரது யோசனைகளைக் கேட்டும், தமது எண்ணங்களை வெளியிட்டு மிருந்தார். முடிவாக சஞ்சீவி ஐயர், “கவலை வேண்டாம்; தாங்கள் சொன்னபடி காரியத்தை நான் நிறைவேற்றுகிறேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டு சலாம் செய்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். பெரிய தம்பி மரக்காயர் எழுந்து நூர்ஜஹானிடம் விரைவாகச் சென்றார்.

★★★★★★★★★



21 வது அதிகாரம்

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?


ஞ்சை போலீஸ் இன்ஸ்பெக்டரான புளுகுமலைப் பிள்ளையும் தாந்தோனி ராயரைப்போலவே, சாம்பசிவத்தின் மீது பெருத்த பகைமை கொண்டிருந்தார். அதன் காரண மென்ன வென்பதை இரண்டொரு சொற்களில் சொல்லிவிடுவோம்; பிள்ளையவர்கள் பெருத்த படிப்பாளியல்லர்; என்றாலும் அவரது கற்பனா சக்தியோ அபாரமானது; அவரது மூளையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/96&oldid=1251968" இலிருந்து மீள்விக்கப்பட்டது