பக்கம்:மேரியின் திருமகன்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கைகள் எளியோர்க்கு உதவி செய்யட்டும்
கண்களுக்கு காமக்குரோதம் வேண்டாம்
நெஞ்சிலே ஈரம், நினைவிலே தூய்மை
சொல்லிலே இனிமை விளங்கட்டும் கேளீரென்றார்
குன்றுகளும் அவர்குரலை எதிரொலித்துக் கொண்டிருந்தன

ஞான முழுக்கு

ஏசுவை பகைத்த ஏரோது இன்றில்லை
நாயகனை தாயகத்துக்கு அழைத்து செல்கஎன
சூசைக்கு கபிரியேல் தோன்றிச் சொன்னான்.
சூசை நாசரேத்தூரில் குடியேறினார்
அதனால், ஏசுவை நசரேயன் என்றழைத்தனர்
ஒருநாள், யோர்தான் நதிக்கரைக்கு வந்தார்
முழுக்காடுவார் வரிசையில் முதல்வரும் தொடர்ந்தார்
ஆண்டவரைக் கண்ட அருளப்பர் பரவசமாகி
தேவ செம்மறியே தாவீதின் திருக்குமரனே
ஆற்றுநீரால் அயலவரை புனிதப்படுத்தினேன்
ஆவியால் என்னைத் தூய்மைப் படுத்துங்கள்
என்றடி தொழுதார் அவர்டியை இவர்தொழுது
‘இப்போதைக்கு இதுவே நடக்கட்டும்’ என்று
அருளப்பர் திருக்கரத்தால் திருமுழுக்கு ஆடினார்
“எனது அன்பார்ந்த மகன் இவரே” என்று
வானின்ற தெய்வக்குரல் வாழ்த்தியது
தேவ ஆவி வெண்புறாவாக வந்திறங்கியது
பாலைவனத்துக்கு இட்டுச் சென்றது ஆங்கே