பக்கம்:மேரியின் திருமகன்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

ஆண்டவர் நாற்பது நாள் நோன்பிருந்தார்
'கடவுளின் மகனானால் கற்களை அப்பமாக்கு'- என்று
சாத்தான் அவரைச் சோதிக்கக் கேட்டது
அப்பத்தினால் மட்டுமன்று ஆண்டவரின்
வார்த்தைகளினாலே வாழ்கிறான் மனிதன்
-என்றார்'
பின்னர் கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டுபோய்
குதித்து பார் தெய்வம் காக்கட்டும் என்றது
கடவுளை நீ சோதியாதே என்பது வேதம் என்றார்
வானுயர்ந்த மலையின் சிகரத்திலே நிறுத்தி
அரசுகள் பலவற்றை வளத்தோடு காட்டி
என்னை வணங்கினால் அத்தனையும் உனக்கென்றது
'இறைவன் ஒருவனே வணக்கத்துக்குரியவன்'
சாத்தானே அப்பாலே போ என்று அதட்டினார்
வான் தூதர் வந்து பணிந்தார் பணிபுரிந்தார்

இயேசு கலிலேயாக் கடற்கரையில் நடந்திருந்தார்
வலைவீசிக் கொண்டிருந்த பெலவேந்திரர் சீமோன்
போதகரே எங்கு போகின்றீர் எனக் கேட்டனர்
மனிதரைப் பிடிக்க வாருங்கள் என்றழைத்தார்
வழியில் யாகப்பரும் அவர்தம்பியும் தொடர்ந்தனர்
நாசரேத்தின் செபக்கூடம் ஒன்றிற்குள் நுழைந்தார்
வாரீர் விண்ணரசு வருகின்றது. விழித்திருங்கள்
மன்றாடுங்கள் உங்கள் பாவம் மன்னிக்கப்படும்
என்று அறைகூவினார் அவரிடம் இசயாஸ்
எழுதிய ஏட்டுச்சுருளைக் கொடுத்தனர்
விரித்தார் படித்தார் அதிலே கண்டது