பக்கம்:மேரியின் திருமகன்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

கிடைக்கின்ற முதல் மீனின் வாயில் கிடைக்கும்.
ஸ்தாத்தேர் என்னும் வெள்ளி காசு-அதனை
எனக்காகவும் உனக்காகவும் செலுத்துக என்றார்
ஆயக்காரன் வீட்டில் விருந்து நடந்தது
திருக்குமரன் பாவிகளோடு உண்பதாகப்பரிகசித்தனர்
பாவிகளை மீட்கவே வந்தேன்- மருத்துவன்
நோயுற்றவர்க்கே அல்லால் மற்றவர்க்கு ஏன் ?
பிறப்பினால் எவனும் பெரியவன் ஆவதில்லை
ஏவல் தொழில் புரிபவன் இழிந்தவனுமல்ல என்றார்
அதுநேரம் மகதலேனாள் தேவனின் திருவடியை
கண்ணீரால் கழுவினாள் தலைமுடியால் துடைத்தாள்
பரிமளத்தைலத்தை பாதங்களில் பூசினாள்
இதைவிற்றால் ஏழைகட்கு உதவுமென்றான் யூதாஸ்
ஏழைகள் எப்போதும் உங்களோடிருப்பர்
இறைமகன் இருக்கப்போவது சிலகாலம்

அதனால் அவள்தொண்டு ஆண்டவருக்கு உகந்தது என்றார்

வீதியில் ஒரு விபச்சாரியை நிறுத்தி
மோயீசன் கல்லெறிந்து கொல்லச் சொன்னார்
போதகரே தீர்ப்பிடுங்கள் பொல்லாதவளுக்கென்றார்
ஏசு தரையில் குனிந்து எழுதியபடி
உங்களில் பாவம் செய்யாதவன் அவள்மேல்
முதலில் கல்லெடுத்து போடுக
என்றார்.
கூடியிருந்தவர் நழுவினார் முடிவில்
ஒருத்தியே நின்றிருந்தாள். நானும் தீர்ப்பிடேன்
இனியும் பாவத்திற்கு ஆளாகாதே என்றருளினார்