பக்கம்:மேரியின் திருமகன்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஒரு ஓய்வு நாளில் செபக்கூடத்தி லிருந்தார்
சூம்பிய கையன் ஒருவன் தேம்பினான்
ஆண்டவர் அவனை அருகில் அழைத்தார்
தொழுவதற்கு கையில்லை என்றதவன் கண்ணீர்
கருணைப் பெருக்கில் கட்டித் தழுவினார்.
ஆண்டவரைத் தொழ அவனுக்கு கைவந்தது
பார்த்திருந்த பரிசேயர் ஆத்திரப்பட்டார்.

ஓய்வு நாள் சட்டத்தை மீறுவதோ எனக்குமுறினார்
உங்கள் கன்று கிணற்றில் விழுந்தால்
ஓய்வு நாளென்று சாக விடுவீரா?
இறைவன் சூரியனை எரிக்கச் செய்கிறான்
காற்று வீசிக் கொண்டேயிருக்கிறது
மானிடனே உனக்கு மட்டும் ஓய்வா ?
மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவரென்றார்


பிறிதொருநாள் திபேரியக் கடற்கரையில் அருளினார்
களைப்புற்றவர்களே என்னிடம் வாருங்கள்
இறைவன் கருணைநிழலில் இளைப்பாற்றுகிறேன்
பாரம் சுமக்க முடியாதவரே இறக்குங்கள்
நான் ஏற்கிறேன் உங்கள் நுகம் எளிதாகும் என்றார்
நல்லது செய்ய நாளை என்று தள்ளாதீர்
எதை உண்பது என்று ஏங்கி அலையாதீர்
வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை
விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை.