பக்கம்:மேரியின் திருமகன்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ராயப்பா என்ற குரல் கேட்டு தேவனென்று
உணர்ந்தனர். ஆண்டவரே என்று கூவினர்
ராயப்பர் தன்னை மறந்து அலைமேலோடினார்
அச்சமும் ஐயமும் சூழ்ந்தது அமிழ்ந்தார்
கருங்கடலினும் பெரிய கருணைக்கடல் கைகொடுத்தது
நீரும் நெருப்பும் நிலமும் ஒன்றே
நீவீர் விசுவாசத்தோடிருக்கும் வரை
என்றார்

ஆகமம் தெரியாது நோன்பிருக்க மாட்டார்
ஓய்வு நாளுணராது கதிர்கொய்து கொரிப்பார்
கழுவாத பாத்திரத்தில் கைகழுவாமல் உண்ணும்
தன் சுத்தம் அறியாத பரிசுத்த பரம்பரை என்று
பரிசேயர் சீடர்களை பரிகசித்தார் ; பராபரன்
மானிடக் கற்பனைக்கு அடிமை நீங்கள்
ஆண்டவன் கட்டளைக்கு வழிநடப்பு நாங்கள்
புறத்தேயிருந்து உள்ளே செல்வது
மனிதனை மாசுப் படுத்துவதே இல்லை.
கேடான எண்ணம் கீழான நடத்தை
பொய்மை பொறாமை கொலைகளவு
விபச்சாரம் பேராசை இன்னபல தீமைகள்
மனிதன் உள்ளிருந்து வந்தே அவனை
மாசுப் படுத்துகிறது என்பதை அறியுங்கள்
ஆட்டுத்தோல் போர்த்தியிருக்கும் ஓநாய்களே
உங்கள் குள்ளமனம் திருந்தட்டும்
என்றார்