பக்கம்:மேரியின் திருமகன்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


லாசர் உயிர் பெற்றார்

மார்த்தாள் மரியாளுக்கு உடன்பிறப்பு லாசர்
பெத்சாயிதா ஊரினன் ஏசுவுக்கு இனியவன்.
பிணியுற்றான் இறந்தான். பேதுற்றார் சோதரிகள்
ஈதுணர்ந்த ஏசு பெத்சாயிதா புறப்பட்டார்.
துக்கம் கேட்பதற்கென்று எண்ணினர் சீடர்,
தூக்கத்திலிருந்து எழுப்புவதற்கென்றார் ஏசு.
கல்லறைக்குள் உடல் அழுகி உருக்குலைந்திருப்பவனை
உயிர்த்தெழச் செய்வது எப்படியென்றார் தோமா.
ஆண்டவர் மகிமை உலகம் அறியவே
மாண்டிருக்கிறான். சாகவில்லை
என நடந்தார்
எதிர்கொண்ட மார்த்தாள் ஆண்டவரே நீர் இங்கே
இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டானென்றழுதாள்
ஆண்டவரைக் கண்டு மரியாள் பொறுமினாள்
ஏசு மனங்குமுறினார். இறைவனிடம் கேட்டார்
பிதாவே சுதனின், பெருமை உலகறிய
எனக்கினிய நண்பனை தந்திடுக எனச் செபித்தார்
லாசரே வாவெளியே
என அழைத்தார்.
கட்டுண்ட துணிப்பொதியாக லாசர் வந்தார்.
கர்த்தரின் கருணை நிழலில் அவருயிர் தழைத்தார்
இறந்தவன் பிழைத்தான் என்ற சேதி கேட்ட
அன்னாஸ் கைப்பாஸ் அதிர்ச்சி கொண்டார்
இனியும் ஏசுவை விட்டு வைத்தால்
தங்கள் ஆதிக்கம் அழியுமென்று சதிபுரிந்தார்

3