பக்கம்:மேரியின் திருமகன்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தோழனே கோழிகூவு முன்னால் என்னை
மூன்று முறை மறுதளிப்பாய் என மறுத்தார்
ஆண்டவருடன் இறப்போம் எனக் கொதித்தனர்
என்னைத் தனியே விட்டு ஓடுவீர்கள்
ஆனாலும் தந்தை என்னோடிருப்பார்.
மனுமகன் மகிமைபெறும் நேரம் இதுவே
உலகை நான் வென்றுவிட்டேன் என்றார்.

இறைமகனைப் பிடித்தனர்

பின்னர் ஒலிவமலைச் சாரலுக்குச்சென்று
கெத்சேமனித் தோட்டத்தில் செபித்திருந்தனர்
மகிமை பொருந்திய எனது தந்தையே
மண்ணுக்கு என்னை அனுப்பினவரும் நீரே
விண்ணுக்கு என்னை அழைப்பவரும் நீரே
வந்த பணி தீர்ந்ததையா, வருகின்றேன்!
வாழ்ந்து காட்டினேன் வார்த்தைகளால்
இந்த உலகை அளந்து காட்டினேன்.
உணர்ந்தவர்கள் உண்டு உணராத சிலருக்கு
உதிரம் சிந்தி காட்டுகிறேன். இது உறுதி !
ஊனுடலும் மானிடமும் போதுமென்றால்
மறுப்பில்லை என் விருப்பம் எதுவும் அன்று
நின் விருப்பமே நிறைவேறட்டும்
என்றார்.
மனங்கனிந்தார் மண்ணில் கவிழ்ந்தார் மன்றாடினார்
துயரத்தின் உருக்கமோ தூக்கத்தின் கலக்கமோ