பக்கம்:மேரியின் திருமகன்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

செபித்திருந்த சீடருக்கு விழித்திருக்க முடியவில்லை
எழுப்பினார் ஆண்டவர் எதிரே படை வந்தது
மனுமகனை அடையாளம்காட்ட ராபி என்று
முழந்தாளிட்டு முத்தமிட்டான் யூதாஸ்.
இவர் எதுக்கு வந்தீரென்றார்.
அவர் ஏசுவைப் பிடிக்க என்றார்.
நீங்கள் தேடிவந்த ஏசு நான்தான்.
இவர்களைப் போக விடுங்கள்
நாடெல்லாம் சுற்றினேன். நாளெல்லாம் போதித்தேன்
என்னைப் பிடிக்க இரவில் வந்ததேன் என்றார்
மால்குஸ் ஆண்டவர்மீது கைவைத்தான்.
மறுகணம் ராயப்பர் அவன் காதறுத்தார்
உருவிய வாளை உரையிலே போடச்சொல்லி
அறுந்த காதை பொறுத்தினார் அருளினால்
சீடர்கள் சிலர் நழுவினர் சிலர்ஓடினார்
தேவனின் திருமகனை சிறைப்பிடித்தனர் அங்கே

அன்னாஸின் முன்னே கொண்டு நிறுத்தினர்
ஏதுபிழை செய்தேன் எதற்கென்னை பிடித்தீர்
குருடர்க்குப் பார்வை கொடுத்தது குற்றமா ?
தொழு நோயாளி துயர் தீர்த்தது தவறா ?
பிணிகளைப் போக்கினேன். சாவுகளை மீட்டேன்
பொய்யை வெறுத்தேன் பொல்லாங்கை மறுத்தேன்
இதிலே எது தீமையானதெனக் கேட்டார்
இந்த சித்துக்கள் வித்தைகள் என்பதறிவோம்