பக்கம்:மேரியின் திருமகன்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

நீ வேதம் படித்தவன் அல்ல என்றார் ஒரு பண்டிதர்
என் வார்த்தைகள் அனைத்தும் வேதம் என்றார்
இந்த செறுக்கிற்கே சிறைப் பிடித்தோம்
இறைவன் மகன் என்று சொன்ன
ஆணவத்தை மன்னிப்பதற்கில்லை என்றார்
என் தந்தையை நானறிவேன் அந்த
உண்மையை உலகறியச் சொன்னேன்
முந்தை இறைவாக்கினரின் வாக்குகளை தொகுத்துப்பார்
வரிக்குவரி நானே தெரிவேன் என்றார்
கடவுளுக்கு மகனானால் கைதியானதேன் என்றனர்
நினைத்தால் நெருப்பு மழையாகப் பொழியும்
கடல் பொங்கிவரும் காற்று சுழன்றடிக்கும்
அந்தக் கொடுமைக்கு நல்லவரும் மாய்வார்
அறியாத மக்களும் அழிவார் ஆதலின்
கட்டுண்டேன் இன்னும் நீர்திருந்தக் காத்திருக்கிறேன்
என்றார். ஆத்திரக்காரன் ஒருவன் அறைந்தான்
மூர்க்கன் ஒருவன் முகத்தில் உமிழ்ந்தான்
கூண்டிலே நடுவனை நிறுத்தி குற்றவாளி
தீர்ப்பிடும் நெறிகெட்ட நிலைக்கு ஆளானார்
கோயிலை இடிக்கச் சொன்ன நிந்தனைக்கு
இவனைக் கொல்லுக என்று கூவினார்
சத்தியம் சொல்லுக நீர்தான் மெசியாவோ ?
அற்புதத்தைக் கண்டீர் ஆணவத்தை திருத்தினேன்
அப்போதும் உணரவில்லை என்றால் இறைவனின்
வலப்பக்கத்தில் அமர்வேன் அறிக என்றார்.
இதுபெரிய தேவநிந்தனை மன்னிப்பில்லை என்று

5