பக்கம்:மேரியின் திருமகன்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அன்னாஸ் தன்உடையைக் கிழித்துக் கொண்டார்
உடனிருந்தோர் கொல்லுக கொல்லுகவெனக் கூவினர்

முற்றத்தில் காவலர் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர்
வந்த ராயப்பரை வழிமறித்தாள் ஊழியக்காரி
ஏசுவின் சீடரில் இவனொருவன் என்றாள்.
இல்லை இல்லை என வெளிநடந்தார் வெட்கினார்
வாசலில் காத்திருந்தார். காவலன் ஒருவன்
நசரேயனோடு இவனைக் கண்டதாக நினைவென்றான்
இல்லை என்று மறுத்தார். மனம்நொந்தார்
மால்குஸின் உறவினன் ஒருவன் மறித்து
காதறுத்தவன் இவனே என்றான். இல்லை என்றார்.
இதயம் பொங்கி வழிந்தது, கண்ணீ ராக.!
குமாரன் உரைத்தபடியே கோழியும் கூவிற்று

ஞானப் பேரரசு

பொழுது புலர்ந்ததும் புரட்சிகாரன் என்று
பிலாத்தின் முன்னால் கொண்டு நிறுத்தினார்
புதியதோர் அரசு அமைப்பதாக மக்களை
திசை மாற்றுகிறான் எனவழக்குரைத்தார்
வேந்தனும் ஏசுவை விடை கேட்டான்
என்னரசு ஞானப் பேரரசு வேதம்
அதன் சட்டம் அன்பும் சகிப்பும் நடைமுறை

ஒப்பமுடியாதவர் பகைக்கின்றார் என்றார்
பிலாத்து அவர்பேச்சில் பிழைகாணவில்லை
மதத்தை மதிப்பதில்லை அழிக்க நினைக்கிறான்