பக்கம்:மேரியின் திருமகன்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ஆங்கே செல்லுக என்று ஆணையிட்டான்
படைமறவர் ஆண்டவரை சிகப்பில் உடுத்தினார்
முள்ளால் முடிதரித்து எள்ளி நகைத்தார்.
மூங்கில் ஒன்றை செங்கோலெனக் கொடுத்தார்.
தேவனே உன் தீர்க்கதரிசனம் எங்கே
யூதரின் அரசே உன் ஆளுகை எங்கே
என்ற கேள்வியும் கேலியுமாக
மீண்டும் பிலாத்திடம் கொண்டு வந்தனர்
பிலாத்துக்கு வேதனை பெரிதாயிற்று
மன்றிலே நின்றிருந்த மனுமகனைக் காட்டி
சாட்டுகின்ற குற்றம் எதுவும் தெரியவில்லை.
சாவுக்குரியதொன்றும் அவர் செய்யவில்லை. '
தண்டித்து விடுதலை செய்வேன் என்றான்
முப்பரின் தூண்டுதலால் ஏற்பட்ட கூக்குரல்
ஏசு ஒழிக நசரேயன் ஒழிக
சீசரின் எதிரியை எருசலேமின் பகைவனை
சிலுவையில் அறைக சிலுவையில் அறைக என்று
ஆரவாரித்தனர் வானைப் பிளந்தது கூக்குரல்
பெரியதொரு தீமை விளையப் போகிறதென்று
பிலாத்தின் மனையாள் கலக்கமுற்றாள்
இறைமகனுக்குத் தீங்கிழைக்க லாகாதென
அரசனுக்குத் தகவல் அந்தரங்கத்தில் அனுப்பினாள்
பாஸ்கா விழாவை முன்னிட்டு ஏசுவை
விடுதலை செய்வோம் என்றான் ஒப்பவில்லை