பக்கம்:மேரியின் திருமகன்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

சுமந்து நடந்தார் ரத்தம் வியர்த்தது
தட்டுத் தடுமாறி தளர்ந்து விழுந்தார்
வேதனை மிகுந்த வெரோனிகா துணிந்து
ஈரத்துணியால் முகத்தை ஒற்றி எடுத்தாள்
ஏசு தனது ரத்தத்தில் சித்திரம் ஆனார்

கல்வாரியில் கசந்த காடி கொடுத்தனர்
குடிக்க மறுத்தார் கொடுமையை சகித்தார்
ஆண்டவரை சுள்ளாணி கொண்டு அடித்து
சிலுவைக்கு மேல் யூதருக்கரசன் ஏசு
என்ற பத்திரம் எழுதிப் பொருத்தினர்.
பரிசேயர் சிலர் நீதேவனின் மகனானால்
சிலுவையிலிருந்து இறங்கிவா என்றனர்
இடித்த கோயிலை எழுப்பித் தருவோனே
இப்போது உன்னையே நீ காப்பாற்றிக்கொள்
என நகைத்தனர். நல்லவர் அழுதார்

உள்ளத்தில் பொங்கி எழும் ஊற்றாலே
உலகின் ஆன்ம தாகத்தை தணித்தவருக்கு
காடியிலே தோய்த்து காளானை நீட்டினார்
மறுத்தார், மழைத்துளிகள் வந்துதவின -
தாய்மை கண்ணீர்த் துளிகளாக கரைந்துருள
கலங்காத மகனுக்கு கலங்கி நின்ற அன்னையை
அருளப்பனுக்கு இதோ உன்தாய் என்றார்.