பக்கம்:மேரியின் திருமகன்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
போற்றி


முள்ளால் முடிஎடுத்து முகத்தில் உமிழ்ந்து
சுள்ளாணி கொண்டடித்த துஷ்டரையும் நோவாமல்
மன்றாட்டு கேட்ட மரியாள் திருமகனே

தருமத்தை நிலைநிறுத்த தன்னையே விலைகொடுத்து
சிலுவையிலே உயர்ந்த தெய்வத் திருமகனே

பாவிகளை மீட்கப் பாடுகளை ஏற்று
ஆவிதனைக் கொடுத்த எங்கள் ஆண்டகையே
 
கல்வாரி மலையும் ஒருகாவியம் ஆக
கல்லறையில் உயிர்த்தெழுந்த கருணைத் திருவிளக்கே

ஆதி மனிதன் கனிபறித்த மரத்தில்
நீதி தழைக்க நீயும் பழுத்தாயோ
காற்றும் அடங்கும் கடலும் கேட்கும்
பிணியும் ஒடுங்கும் பேயும் ஒதுங்கும்
மரித்தார் பிழைப்பார் மகத்துவத்தை என்னென்பேன்
தட்டினால் திறக்கும் கேட்டால் கொடுக்கும்
தேவனே வருக திருக்குமரனே வாழ்க