பக்கம்:மேரியின் திருமகன்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சேசு மரி சூசை

சின்னக் குறிப்பிடம்

1. அர்ச். சிலுவை மந்திரம்

அர்ச் சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுரா ! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்.

2. ஆறு இலட்சணங்கள்
  1. சர்வேசுரன் தாமாயிருக்கிறார்.
  2. துவக்கமும் முடிவும் இல்லாமலிருக்கிறார்.
  3. சரீரமில்லாமலிருக்கிறார்.
  4. அளவில்லாத சகல நன்மை நிறைந்தவராய் இருக்கிறார்.
  5. எங்கும் வியாபித்திருக்கிறார்.
  6. எல்லாவற்றிற்கும் ஆதிகாரணராயிருக்கிறார்.


3. கர்த்தர் கற்பித்த செபம் [பரலோக மந்திரம்]

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவதுபோல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தின்மை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும், எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தின்மையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

4. மங்கள வார்த்தை செபம் [அருள் நிறைந்த மந்திரம்]

அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே; பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே; உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.