பக்கம்:மேரியின் திருமகன்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மேரியின் திருமகன்


உலகம் பிறந்தது

ஆதியில் தேவன் வானைப் படைத்தான்
நீல வானை அழகு செய்வதற்கு
வைரமணிகளை வாரி இறைத்தான்
நிலத்தைப் படைத்தான் அது பூமியானது
நிலவைப் படைத்தான் இருளுக்கு விளக்கானது
பருதியைப் படைத்தான் பகலைச் செய்தது
நீரைப் படைத்தான் நெடுங்கடலானது
நெருப்பைப் படைத்தான் சூடும் சுடருமானது
காற்றைப் படைத்தான் தென்றலும் புயலுமானது
ஆற்றைப் படைத்தான் ஊற்றைப் படைத்தான்
மாநிலம் பூந்தோட்டம் ஆனது
நீருக்கு நீந்துவன வானுக்குப் பறப்பன
நிலத்துக்கு ஊர்வன நடப்பன என்றே
உயிர்களைப் படைத்தான் உலகம் தழைத்தது.
ஏழு நாட்களில் இவ்வுலகம் பிறந்ததம்மா!

மனிதன் பிறந்தான்

மண்ணைப் பிடித்தான் மனிதன் ஆனான்
பெண்ணைப் படைத்தான் அவன் எலும்பிலிருந்து.
அந்த ஆதிமனிதரே ஆதாம் ஏவாள்
பசிதாகம் இல்லை பாவம் தெரியாது
தேவனின் கற்பனைக்குக் காட்சியாக