பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேதினம்


வைகாசியில் கருடசேர்வை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூர உற்சவம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசியில் சனிக்கிழமை உற்சவம், ஐப்பசியில் தீபாவளி, கார்த்த்திகையில் தீபவிழா, மார்கழியில் திருவாதிரை, தையில் பூசம், மாசியில் மகம், பங்குனியில் உத்திரம், சித்திரையில் பௌர்ணமி. இப்படி மாதந்தோறும் ஒவ்வொரு திருவிழா நடத்தி, தலைமுறை தலைமுறையாகப் பழக்கப்பட்ட மக்களிடையே மே தின விழாக் கொண்டாட முற்பட்டிருக்கிறோம். மே விழா, மேதினியில் மக்களுக்கு வாழ்வு அளிக்கும் விழா என்று கூறினால்,மக்கள் சுலபத்தில் நம்பமாட்டார்கள்; ஆச்சரியப்படுவார்கள். நாட்டு மக்களிலே, சிந்திக்கக் கற்றுக்கொண்ட பகுதியினருக்கு மட்டுமே, மே தின விழாவின் முக்கியத்துவம் தெரியும். மற்றவர்கள், இன்னமும் நான் முன்னால். குறிப்பிட்ட பல்வேறு திருவிழாக்களிலேயே ஈடுபடுப்வர்கள் - குடும்பம் குடும்பமாக!.

பொன்மலைத் திராவிட வாலிபர்கழகத்தார், மே தின விழாக் கொண்டாட முன்வந்தது பற்றி, நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சில நகரங்களிலும், நமது நண்பர்கள் இந்த விழாவைக் கொண்டாடுகின்-