பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மே தினம் முரண்பாடு இல்லை; வேறுபாடுதான் உளது. இன்னும்-- இந்த வேறுபாடு தண்ணீருக்கும் இளநீருக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது. இளநீர் சற்று இனிப்பாக இருக்கும்; தண்ணீர் சுவையற்றிருக்கும். வேற்றுமை அவ்வளவே. இளநீரோடு தண்ணீர் கலந்தால் உப யோகமற்றதாகி விடாது. இதுவும் முரண்பாடல்ல - வேற்றுமைதான். இத்தகைய வேற்றுமைகளை விவேக மிருந்தால் விலக்கிக் கொள்ளலாம்; அறிவு இருந்தால் அகற்ற முடியும்; ஆனால் ஆரியத்திற்கும் திராவிடத் திற்கும் உள்ள முரண்பாடு, பார்த்த அளவிலேயே முரண்பாடு உடையவை என்பது தெள்ளிதில் விளங்கும். ஆரிய - திராவிட முரண்பாடுகளை நாம் வாழ்க் கையிலேயே காணலாம். கலையிலே, கருத்திலே, இன்ன பிற எல்லாவற்றிலும் காணலாம். எடுத்துக் காட்டாக ஒரு சில உரைக்கின்றேன்; உள்ளத்திலே ஊன்றுங்கள். ஆரியர்களின் கடவுள் அனந்தம் கோடி, அநேக அவதாரங்கள், அற்புத வடிவங்கள். ஆனால் திராவிடர், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற பெற்றிருந்தனர். ஆரியரிடையே செ பண்பைப் 'சாதி வேற்றுமை உண்டு; திராவிடரிடம் இல்லை. ஆரியம் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமன் என்ற படிப்படியான உயர்வு தாழ்வு தரும் சாதிகளைக் கொண்டது. திராவிடம் அரசர், வணிகர், வேளாளர் என்ற முறையிலே பாகுபாடு உடையதா யிருந்தாலும் உயர்வு தாழ்வைக் கொண்டதல்ல. உலுத்தரை உயர்த்தி உழைப்பாளியை உறிஞ்சும் முறை இல்லை. ஆரியன் பிறரைத் தொட்டால் தீட்டு,