பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்சிப் படலம் 95 மூன்று வாரம் தங்கியிருந்துவிட்டு, லிவர்பூல் அறை முகத்தை அடைந்தனர். லிவர்பூலில் காலின்ஸின் பழந்தோழனை மாலுமி நீல் கெர் அவர்களுக்குத் தங்க இடம் கொடுத்துப் பாது காத்துவந்தான். காலின்ஸ்-சம், லண்டனில் ஆக வேண்டிய வேலைகளே முடித்துக்கொண்டு, அங்கு வந்து சேர்ந்தான். 86-மணி நேரமாக அவன் உணவே எடுத் துக் கொள்ளவில்லை. ஆதலால், லிவர்பூலில் ஒரு தினம் ஒய்வெடுத்துக்கொள்ள விரும்பின்ை. ஆல்ை, அன் றிரவு அவனுடைய மாலுமி நண்பைெருவன் அயர்லாங் துக்கு ஒடத்தில் செல்வதாகத் தகவல் கிடைத்தது. உடனே அவன் களேப்பைப் பொருட்படுத்தாது பிர யாணமானன். நீல் கெர் அவனுடன் துறைமுகத்திற் குச் சென்று வழியனுப்பின்ை. காலின்ஸ் ஒடத்தில் ஏறிச் செல்வதை மூன்று ஒற்றர்கள் கண்டு சந்தேகம் கொண்டார்கள். அவர்களுக்கு அவனைத் தெரியாத நிலைமையில் பேசாது நின்றனர். ல்ே கெர், திரும்பும் பொழுது, கரையில் அவர்களேக் கண்டு, ரயிலுக்கு நேரமாய் விட்டதோ ? வெகு நேரமாய் இங்கிருந்து விட்டேன் ! என்று கேட்டுக்கொண்டே, அவசரமாய் ரயிலுக்குப் போகிறவன்போல் மறைந்துவிட்டான். டிவேலரா இங்கிலாந்தில் மறைந்து வாழுமிடத்தி லிருந்து அயர்லாந்துக்கு வரவேண்டும் என்றும், தாய் காட்டில்தான் அவருக்கு மிகுந்த வேலை இருந்தது என் றும் அவருடைய நண்பர்கள் கட்டாயப்படுத்தினர்கள். காலின்ஸ்-சம் அவரை நேராக அங்கு வந்து சேரவேண்டும் என்று வற்புறுத்தின்ை. ஆனல் டிவேலரா, கேராக அமெரிக்கா சென்று, அங்குள்ள ஐரிஷ்காரர், பொது