பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்பாடுகள் 125. யூகித்துக்கொள்ளலாம். காரியாலயத்தில்தான் பண சம்பந்தமான கணக்குகள் யாவும் இருந்தன. ஒரு சமயம் காலின்ஸ் அங்கு வேலை செய்து கொண்டிருக்கையில், திடீரென்று பட்டாளத்தாரும் போலீஸாரும் அங்கு வந்து தோன்றினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காலின்ஸிடம் சென்ருர். அவருக்குக் காலின்ஸைத் தெரியாது. காலின்ஸ் விரைவாக ரிவால்வரை எடுத்து டைப் அடிக்கும் பெண்ணுெருத்தியிடம் கொடுத்து மறைக்கச் சொல்லிவிட்டு, கையில் சில தஸ்தவேஜகளுடன் கின்ருன். அங்கிருந்து தப்புவதற்கு எவ்விதத் திலும் வழியில்லை. இன்ஸ்பெக்டர் அவன் கையிலுளள காகிதங்களேப் பார்க்கவேண்டும் என்று கேட்டார். காலின்ஸ் மிகுந்த தைரியத்துடன் அவரைப் பார்த்து, 'உமக்கு அவற்றில் என்ன வேலே இருக்கிறது ? உம் முடைய சொந்த நாட்டாரையே ஒற்றுப்பார்க்கும தொழில் கன்ருயிருக்கிறது !' என் அறு பரிகசித்தான். இச் சொற்களேச் செவியுற்ற இன்ஸ்பெக்டர் திகைத்து கின்ருர். அங். கிலேயில், காலின்ஸ் அப்பால் சென்று, மேல் மாடியில் ஏறி, அங்கிருந்து பக்கத்திலிருந்த ஒரு போஜன விடுதியின் கூரையின் மேல் பதுங்கியிருந்தான். சோதனே முடிந்தது. போலீஸாரும் பட்டாளத்தாரும் மறைந்தொழிந்த பின்னர், அவன். மெல்ல வெளியேறித் தனது காரியாலயத்தை அடைந்தான். போலீஸார் போகும்பொழுது இரண்டு முக்கியமான தொண்டர் களேக் கைதி செய்துகொண்டு சென்றனர். பின்னல் காலின்ஸின் வேலைகளுக்காக ஒரு புதுக் காரியாலயம் கட்டப்பட்டது. அதில் பணம், தஸ்த வேஜ-கள் முதலியவற்றை மறைத்து வைப்பதற்குக்