பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மைக்கேல் காலின்ஸ் களிலிருந்தும் பணம் அனுப்பப்பட்டது. தென் ஆப் பிரிகாவிலுள்ள ஐரிஷ்காரர் மட்டுமே 1,000 பவுன் அனுப்பியிருந்தனர். நிதி சம்பந்தமான கணக்குகளெல்லாம் காலன்ஸால் மிக ஒழுங்காக எழுதிவைக்கப்பட்டன. ஒரு சமயம் போலீஸாருடைய சோதனையில் அகப்பட்ட சில கணக்கு கள் மூலம் பல பெயர்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அப்பெயர்களையுடைய நபர்களில் பலர் முன்ல்ை ஸின் பின் இயக்கத்தில் சேராதவர்கள் என்பதைக் கண்டு அவர்கள் வியப் புற்றனர். நிதிக்குச் சேர்ந்த திரவிய மெல்லாம் கூடியவரை தங்கமாக மாற்றப்பட்டுப் பல இடங்களில் புதைத் து வைக்கப்பட்டது. கொஞ்சப் பணம் மட்டுமே சில நபர் களின் பெயரால் நாணயச்சாலைகளில் போடப்பட்டது. தொண்டர்கள் பணத்தைச் சேகரித்துக் காலின்ஸிடம் கொண்டு வந்து கொடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையா யிருந்தனர். ஒரு சமயமாவது அவர்கள் பணத்தைப் பறிகொடுத்ததில்லை. தேசத்தில் தங்க நாணயங்களின் நடமாட்டமே இல்லாதிருந்த பொழுது, காலின்ஸ் 25,000 பவுன் தங்கத்தைப் பெறமுடிந்தது பெரு வியப்பேயாகும். தங்கத்தைப் பல பெட்டிகளில் அடைத்துப் புதைத்து வைத்ததில், ஒரு சமயம் ஒரு சிறு பிரேதப் பெட்டிகூட உபயோகிக்கப்பட்டது. போலீஸார் தோண்டிப் பார்த் தாலும் கூட, அதில் பிணமிருப்பதாக எண்ணிப் போய் விடுவார்கள் என்பதற்காக இப்படிச் செய்யப்பட்டது !